பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

       ருடைய அழகியமுகம் காட்சிதந்து என்னை அலைக்கழித்துக் 
       கொண்டிருக்கிறது. அவருடைய நினைவை அகற்ற 
       எவ்வளவோ முயன்று பார்த்தேன். முடியவேயில்லை.
  தோ!உன் விருப்பத்தைப் பெற்ற தாயிடம் சொல்வதற்கு
      என்ன? 
  வா: எப்படிச் சொல்வேன்? பூங்குழலி! என்னையொத்த பருவத் 
       தினளான உன்னிடமே கருத்தைச் சொல்ல முடியவில்லை
       யென்றால், பிறரிடம் அதுவும் பெற்ற தாயிடம் சொல்ல 
       முடியுமா? நீ தான் அதற்கு வழி சொல்ல வேண்டும்.
  தோ : சொல்கிறேன்.
  வா: பூங்குழலி! எனக்காக ஒரு உதவி செய்வாயா? நீ முதலில்
       அவரிடம் போய்ப் பேச்சுக்கொடுத்து அவருடைய உள்ளக் 
       கருத்தைத் தெரிந்துகொண்டு வா! நாம் நினைக்கிறபடி 
       அவரும் என் மீது காதல் கொண்டிருக்கிறார் என்பது 
       தெரிந்தால்தானே பெற்றோரிடம் சொல்ல முடியும்?
   
  தோ : கட்டாயம் போய் அவர் கருத்தை அறிந்து வருகிறேன்.

  வா: உனக்கு எப்படி நன்றி சொல்வேன்? பூங்குழலி!
  தோ : எனக்கு ஒன்றுஞ் சொல்ல வேண்டாம். வாய் கைக்கு 
        நன்றி சொல்வதை நீ எங்காயினும் கேட்டிருக்கிருயா?
  வா: இருந்தாலும்......அது போகட்டும். இன்னொன்று. அவரி 
       டஞ் சென்று அவருடைய உள்ளக்கிடக்கையை அறிந்து 
       வந்ததும் நீதான் நற்றாய் மூலமாக பெற்ற தாய்க்கு பக்குவ
       மாகச் சொல்லி தந்தையர்க்கு அறிவித்து திருமணம் செய் 
       விக்க ஏற்பாடு செய்யவேண்டும். நீ இந்த உதவியைச் 
       செய்தால் வாழ்நாள் உள்ள அளவும் நான் உன்னை மறக்க 
       மாட்டேன். . -
  தோ : (குறும்பாக) அதெல்லாம் பொய்ப்பேச்சு. உனக்கு அவர்
       கிடைத்துவிட்டால் அப்புறம் மற்றவர்கள் நினைவெல்லாம்
       உனக்கு எங்கே இருக்கப் போகிறது?