பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

  வா: (வெட்கத்துடன்) அப்படியெல்லாம் நான் இருக்க

மாட்டேனடி. தோ! நீ கேட்டுக் கொண்டபடி காரியத்தை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்கிறேன். எனக்கு என்ன பரிசு கொடுப் பாய்? அதைச் சொல்லு. வா. (கழுத்திலிருந்த முத்துமாகலயை எடுத்து நீட்டி) இப் போதே இதைப் பரிசாகப் பெற்றுக்கொள்.

        {இச்சமயம் தலைமை அமைச்சர் பளிங்கு
          மேடையை விட்டு எழுந்து அவர்கள்
          அருகே வருகிருர்.} 

தலை: (சிரித்துக்கொண்டே) நீ பரிசு வேண்டுமானால் வாங்கிக் கொள், பூங்குழலி ஆனால், நீ வாசுகிக்காக சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை.

         {வாசுகியும் தோழியும் அவரது வருகை யைக் கண்டு திடுக்கிட்டு 
          நடுநடுங்கி நிற் கின்றனர். அடுத்த பூம்புதரின் மறைவில் 
          நின்றிருந்த வள்ளுவருக்கும் அச்சம் உண் டாகிறது}  தலை :நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் பேசியதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். எனக்கு வாசுகியைப் பற்றி இருந்து வந்த கவலை இன்றோடு தீர்ந்துவிட்டது. அவள் விரும்புகின்ற காதலனுக்கே அவளை மனப்பூர்வமாகத் திருமணம் செய்து வைப்பேன்.  

வா: உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பேன்? அப்பா! தலை: (முகமலர்ச்சியுடன்) வாசுகி! நீ விரும்புகின்ற வள்ளுவருடைய கருத்தைத் தெரிந்துகொள்ள வேண்டாமா என்று கேட்கலாம். அவருடைய விருப்பமும் எனக்குத்தெரிந்து போய் விட்டது. அதோ பாருங்கள், பக்கத்துப் பூந்