பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வா வீண் பழி சுமத்துகிறீர்களே? வள் : சரி, சரி; வெகு நேரமாக நிற்கிருய். உன் மெல்லடி நோகப் போகிறது. இப்படி உட்கார். (அவள் கரத்தைப் பற்றி உட்கார வைக் கிருர். வாசுகி நாணம் மேலிட அவர் பக்கத் தில் அமர்கிருள்.) வள் : இந்திரலோகம், சொர்க்கம் என்றெல்லாம் சொல்கிருர் களே! வாசுகி அதெல்லாம் நீ இருக்கும் இடத்திற்குச் சமமாகுமா? - . வா.: (குறும்பாக) யாரைக் கேட்கிறீர்கள்? வள் : ஏன் உன்னத்தான். (அவள் தோள்களைப் பற்றி அனைத்தவாறே) உன்னுடைய தோள்கள் அமிழ்தத்தால் ஆனவையோ! உன்னத் தீண்டியவுடனே என் உடம்பு முழுதும் ஒருங்கே குளிர்ந்து விட்டதே! உயிர் கூடத் துளிர்க்கத் தொடங்கி விட்டதோ என்று பிரமையுண் டாகிறது. - (வாசுகி நாணம் மிகக் கொண்டு மெளன. மாகிருள்.) - வன் : வாசுகி வாய் திறந்து பேசமாட்டாயா? உன் பவழ வாயைத் திறந்தால் முத்து உதிர்ந்து விடும் என்று அஞ்சு கிருயா? . . o . வா : (நாணத்துடன்) போங்கள்; நாதா! வள் : பாலோடு தேன் கலந்தால் போன்ற இனிமையான உன் பேச்சை நான் செவி குளிரக் கேட்க ஆசைப்படு. கிறேன், வாசுகி பேசு, கண்ணே பேசு! : . . . . . . . . . . . . வா: நான் என்னத்தைப் பேசுவது?நாதா உங்களுடைய கனிந்த மொழிகளே நாளெல்லாங் கேட்டுக் கொண்டிருக்க என் உள்ளம் அவாவுகிறது.