பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வள் : வாசுகி கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற். றும் அறியக் கூடிய ஐம்புலன்களும் லயமாகக் கூடிய லயஸ்தானம் பெண்களாகிய உங்களிடந்தானே இருக் கிறது. பெண்ணின்பத்துக்கு இணையான பேரின்பம் வேறெங்கு இருக்கிறது? முக்தியின்பம், நிரதிசய இன்பம் என்பதெல்லாம் முட்டாள்களின் பிதற்றல் பேச்சு. வா : புகழ்வதற்குக் கூட ஓர் அளவு கிடையாதா? நாதா! (வள்ளுவர் வாசுகியைத் தழுவிக் கொள் கிருர்.) வன்: மலரினும் மெல்லிது கூட்டுக்களி. அதன் செவ்வி யறிந்து அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் இன்பச் சுவை முழுதாகக் கிடைக்கும். காற்று இடை புகாதபடி கூடி முயங்குவதிலுள்ள சேர்க்கை இன்பம் முக்தி யின் பத்திலும் கிடையாது என்பேன்; கண்ணே! வா (நெருங்கியமர்ந்து) உங்கள் சொல்லின்பமே பேரின்ப மாயிருக்கிறதே! என்னைக் கிறங்க வைக்கிறதே! நாதா! வள் : என்ைேடு இணைந்து வா! அன்பேl (விளக்கின் ஒளி ஒடுங்குகிறது). காட்சி-12 காலம் : கால இடம் : வாசுகியின் தனியறை உறுப்பினர் : வள்ளுவர், வாசுகி (வாசுகி கண்கலங்கியவாறு அமர்ந்திருக்கிருள். வள்ளுவர் விரைந்து வருகிருர்) வள் : வாசுகி வாசுகி எங்கே இருக்கிருய்? (வாசுகி மெளனமாயிருந்து மனங் குமுறு கிருள். வள்ளுவர் அவள் இருக்குமிடத்தை அடைகிருர்.) -