பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 வள் : வாசுகி! என்ன நான் கூப்பிட்டுக் கொண்டு வருவது கேட்கவில்லே. இத்தனைநாள் என் வருகையை எதிர் பார்த்து வாயிலிலேயே காத்திருப்பாயே! இன்று என்ன உனக்கு? உடம்புக்கு ஏதாயினும்............ * வா.: உடம்புக்கு ஒரு கேடுமில்லை. என்னைப்பற்றி உங்களுக்கு ரொம்ப அக்கரை இருப்பதுபோல ஏன் நடிக்கிறீர்கள்? வள் : நான் நடிக்கிறேன? என்ன தேவிக்கு இன்று பேச்சு ஒரு தினுசா யிருக்கிறது. வன : எனக்கு ஒன்றுந் தெரியாது என்று நினைத்து ஏமாற்றப் பார்க்கிறீர்களா? - வள் : என்ன? என்ன? வா : நீங்கள் என்ன விட்டுப் பிரிந்து போகப்போகிறீர்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியும். வள்: இதை யார் உனக்குச் சொன்னது? வா: யார் சொல்லனும்? என் வளைகளே எனக்கு அறிவித்து விட்டனவே! எல்லோர்க்கும் முன்பாக. - வள் : (தடுமாற்றத்துடன்) வாசுகி! வா: பசப்பி என்ன மயக்கப் பார்க்காதீர்கள். நான் ஏமாற மாட்டேன். நீங்கள் இன்று என்ன விட்டுப் பிரிந்து அரசருடன் போகப்போகிறீர்களா? இல்லையா? நான் கேள்விப்பட்ட இச்செய்தி உண்மைதானே? வள் : (மெல்ல) ஆமாம். வாசுகி! வா. நீங்கள் என்னவிட்டுப் பிரிந்து போகப்போகிறீர். கள் என அறிந்ததுமே, என் கரங்கள் மெலிந்துவிட்டன. கடகமும் வளைகளும் கழலத் தொடங்கி விட்டன. - வள் : மன்னர் ஒரு போர்மேல் செல்கிருர். மெய்க்காப்பான கிைய நான் இச்சமயம் அவருடன் போகாம லிருக்க முடியுமா?