பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதன் அவர்கள் திருக்குறள் உலகம் போற்றும் நூலாக விளங்குகிறது. நாள் ஆக ஆக அதன் புகழும் பயனும் பெருகி வருகின்றன. பல பல மொழிகளில் அது ஏறி வருகிறது. அதைப் பற்றிய ஆராய்ச்சிகளும் விரிந்து வருகின்றன. சாதி, சமயம், இனம், இடம், காலம் என்ற வேறுபாடுகளைக் கடந்து அதன் ஒளி நிலவி வருகிறது. திருக்குறளைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களும் பல்வகை உரைகளும் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஆயினும் திருவள்ளுவரைப் பற்றிய உண்மை வரலாறு இன்னும் தெளிவாகத் தெரியவில்லே, அவரைப்பற்றி வழங் கும் கதைகளுக்குக் குறைவே இல்லை. அவர் இன்ன காலத் தினர், இன்ன இடத்தில் வாழ்ந்தவர், இன்ன சாதியினர், இன்ன சமயத்தினர் என்று வரையறையாகக் கூறமுடியாத நிலையில் இருக்கிருேம் என்ருலும், திருவள்ளுவர் என்ருலே பெரும்புலவர், தெய்வப்புலவர், மகாமேதாவி, மேய்ஞ்ஞானி என்ற எண்ணமே நம் உள்ளத்தில் தோன்றுகிறது. என்னுடைய உழுவலன்பர் திரு. நாரண-துரைக்கண் ணன் அவர்கள் திருவள்ளுவர் வரலாற்றை நாடகமாக்கிக் தந் திருக்கிருர், திருவள்ளுவரைப் பற்றி வழங்கும் நிகழ்ச்சிகளையும் திருக்குறளையும் தம்முடைய கற்பனையையும் கலந்து காட்சி களை உருவாக்கி இந்த நாடகத்தைப் பின்னியிருக்கிருர். திருவள்ளுவர் ஆதிக்கும் பகவனுக்கும் பிறந்த குழந்தை என்பதும், அவர் பிறந்தவுடனே தாய் தந்தையர் அவரை விட்டுப் பிரிந்தனர் என்பதும், அவர் வாசுகியை மணந்தார் என்பதும், மயிலாப்பூரில் அவர் நெய்தல் தொழில் செய்து வந்தார் என்பதும், அவரிடம் தேவர்கள்வந்துஇறைவனுடைய ஊர்த்துவ தாண்டவ இரகசியத்தை உணர்ந்தனர் என்பதும், அவருக்கும் ஏலேலசிங்கருக்கும் நட்பு உண்டாயிற்றென்பதும்,