பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வைத்தல், கிணற்றிலே குடத்தை அப்படியே விட்டு வரல் போன்ற கற்பனைகளையும் ஆசிரியர் தழுவி நாடகத்தை நடத் திச் செல்லுகிருர், காட்சி பதினென்றில் வள்ளுவரும் வாசுகியும் இரவிலே. சந்திக்கின்றனர். அக்காட்சிவில், அவர் தம் இன்ப உரை பாடலிலே, யோன் நோக்குங்கால் நிலன் நோக்கும்: தாம் வீழ்வரர் மென்தோள் துயிலின் இனிது கொல்’, பாலொடு தேன் கலந்தற்றே, கண்டு கேட்டு உண்டு உயிர்த்து மலரி னும் மெல்லிது காமம் போன்ற காமத்துப் பாலிலுள்ள குறட். பாக்கள்ளின் சொல்லும் கருத்தும் மிளிர்கின்றன. - பொறுமையை அளவிட வந்த ஒருவன் துணியைக் கிழித்து வள்ளுவரிடம் விலை கேட்கிருன், துணிந்து அவன் கன்னத்தைச் சுவை பார்க்கிறது அவரது கை. அப்போது தான் செய்த செயல் தக்கதே என்பதைக் கூற்றத்தைக் கை, யால் வினித்தற்ருல்” என்னும் குறளால் திருவள்ளுவர் விளக்கு. வது போன்றவை நாடகத்தின் சுவையை மேலும் மிகுத்துக் காட்டுகின்றன. கிள்ளுவன், அவன் மனைவி பூதகி ஆகி: யோர் நகைச்சுவைக்காக இடையிடையே தோன்றுகின்றனர். திருடர்கள் ஏலேலசிங்காது இல்லத்தே திருடவருதலும், தங்கக் கட்டியை மீனவர் கொண்டு வந்து தருதலும் நாடகத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. - பத்திரிகை உலகிலும், இலக்கியத் துறையிலும் தமக் கென ஓரிடத்தைப் பெற்றுள்ள பழம்பெரும் எழுத்தாளர் திரு. தாரண துரைக்கண்ணன் அவர்கள் நாடகத் துறைக்கு அளிக் கும் இந்நூல் படிக்கத் தக்கது; நடிக்கத் தக்கது. அவரது எழுத்துப்பணி மேன்மேலும் தமிழ் மக்களுக்குப் பயன்படுவ, தாக. - ðp. கருணுநிதி .مه-21