பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 வள்: வாசுகி: யோசித்துப் பார்! உனக்கு மட்டுந்தான் பிரிவுத்துன்பம் இருக்குமா? எனக்கு இருக்காது என்று உன் எண்ணமா? வா; அது என்னவோ! எனக்குத் தெரியாது. நீங்கள் என்னை விட்டுப் பிரிந்து போகவில்லே என்ருல் அச்சமாச் சாரத்தை என்னிடம் சொல்லுங்கள். அப்படியில்லாமல் பிரிந்துபோவதாயிருந்தால் நீங்கள் போனபின்பும் உயிர் பிரியாமல் வாழ்ந்து கொண்டு இருப்பவளிடம் உங்கள் கொடிய வருகை குறித்துச் சொல்லுங்கள். {வாசுகி முகத்தை மூடிக்கொண்டு பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொள்ள முயல்கிருள். இவளேத் தேற்றவே முடியாது என்று தெரிந்ததும் வள்ளுவர் சிந்தனே யுடன் மெல்ல வெளியே செல்கிருர். காலடி யோசை கேட்டுக் கண் திறந்து பார்த்த வாசுகி தன்கணவன் தன்னை விட்டுப் போகி ருர் என்று உணர்ந்ததும், துணுக்குறு கிருள்.) வா : நாதா! நாதா! இங்கே பாருங்கள். நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் போங்கள். - வள் : (திரும்பிப் பார்த்து) என்ன? (வாசுகியை நோக்கித் திரும்பி வருகிருர்.) வா - இப்போதுதான் புரிகிறது, நாதா! நான் எவ்வ்ளவு பெரிய தவறு செய்து விட்டேனென்று. என் பிழையைப் பொறுத்தருளுங்கள். வள்: நீ ஒரு பிழையும் புரியவில்லையே! வாசுகி! வா : மிகப் பெரிய பொறுப்பை மேற் கொண்டு கடமை புரியப் போகும் உங்களைத் தடுத்து நிறுத்த முயன்றது மன்னிக்க முடியாத பெருங் குற்றமென்று உணர்ந்து விட்டேன், நாதா! 4.