பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வன் . உன் மனத்தைப் போட்டு உலப்பிக் கொள்ளாதே! வாசுகி! நீ எனக்கு மகிழ்வோடு விடை கொடுத்து அனுப்பி வை. வன : சற்று இருங்கள், நாதா! இதோ ஒரு நொடியில் வந்து விடுகிறேன். (விரைந்து உள் செல்கிருள். வள்ளுவர் வியப்புடன் பார்க்கிருள்.) வன : (காத்தில் ஆரத்தி திகழ வந்து) நாதா! இப்படிக் கிழக்கே பார்த்து நில்லுங்கள். வன் : நிற்கிறேன். வாசுகி இனி நீ நில் என்ருல் நிற்பதும் போ என்றல் போவதுந் தவிர எனக்கு வேறு வழியில்லே. (நகையாடுகிருர்,} வன : (ஆரத்தியை மும்முறை சுற்றிப் பின் கணவரின் நெற்றி யில் பொட்டிட்டு) சென்று வாருங்கள்; நாதா! வென்று வாருங்கள். (காலில் விழுந்து வணங்குகிருள். வள்ளுவர் வாசுகியின் கூந்தல் அன்புடன் தடவி விட்டு வாழ்த்துகிருர்) வள் : போய் வருகிறேன், வாசுகி விரைவில் திரும்பி விடு வேன்: - - வன : (முகமலர்ச்சியுடன்) போய் வாருங்கள். (கை கூப்பியவாறே கணவர் கம்பீரமாக நடந்து செல்வதை வாசுகி விம்மிதத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிருள்.)