பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கிள் : (கன்னத்தில் அடித்துக்கொண்டு) புத்தி; புத்தி; ஆத்தா! நான் இனிமே இப்பிடி பேசமாட்டேன். தமாஷா... பூதகி : என்னுய்யா! தமாஷ் என் கிட்டே? கிள் : (வாயைக் கைகளால் பொத்தி) இல்லே; இல்லை. பூதகி : (முகத்தை வேறு பக்கந் திருப்பிக் கலுக்கென்று. சிரித்து) மச்சான்! தெரிஞ்சுக்கோ, இனிமே நீ பக்கத்து ஆட்டுக்குப் போவக் கூடாது. அந்த ராங்கிக்காரிங்க சக வாசமே நமக்கு வாணும். அவங்களுக்கு நாம எந்த விதத்திலும் இளைச்சவங்க இல்லேன்னு காட்டணும். ஆமாம். கிள் : நீ கீறின. கோட்டை நா எப்பவாச்சும் தாண்டிப் போயிருக்கேளு? யூதகி : போவ உனக்கு அவ்வளவு தைரியமிருக்கா? கிள் : (நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறு) நா வேணும்னு அந்த மனுஷியைப் போய்க் கேட்கட்டுமா? ஏம்மே! எங்க பூதகி வந்து பேசினு முகங் கொடுத்துப் பேசமாட்டேங் கிறே? நீ என்னு பெரிய மந்திரி பொண்னே? இருந்தா இருந்துட்டுப் போயேன் உன் வரைக்கும். எங்களுக்கு என்னுன்னு கேட்டுட்டு வரட்டுமா? பூதகி : எதுக்காவவும் நீ போவ வாணும் அங்கே நீ எதன கேட்கப் போவ அந்த மண்டைக்கனம் பிடித்தவ ஆம் படையான் உங்க எசமானண்டே கோள் மூட்டப் போருன். உங்க எசமான்தான் அண்டை வீட்டுக்கார னண்டை அடிக்கடி வந்து அப்படி இழையருரே! நாம எச்சரிக்கையா யிருக்கணும். கிள் : ஆமாம். நீ நல்லா ஞாபகப்படுத்தினே.