பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 காட்சி-20 காலம் : நண்பகல் இடம் : வள்ளுவர் இல்லம் உறுப்பினர் : வள்ளுவர், வாசுகி, கொங்கணவ முனிவர், கிள்ளுவன், பூதகி. (வள்ளுவர் உணவு உண்டுகொண்டு இருக் கிருர். வாசுகி அருகமர்ந்து அறுசுவைக் கறி வகைகளேச் சிறிது சிறிதாகப் பரிமாறிக் கொண்டிருக்கிருள். கொங்கணவ முனிவர் அவர்கள் வீடு நோக்கி வருகிருர். அதற்கு முன் கிள்ளுவனின் வீட்டைக் கடக்கிருர்.) கிள் : பூதகி! எனக்குப் பசிக்குதுன்னு எத்தனே தடவை சொல்றேன். சோறு போடமாட்டேன்றியே? பூதகி : என்னய்யா! அப்படி அவசரம்? கும்பி கூவுதோ? கிள் : என் வயிறு கெஞ்சுதுன்னு ஓடி வந்து சோறு போடவா போறே? நான் வே8லக்குப் போவணுமில்லே. அதுக்காவ வாச்சும்............ யூதகி : ஆமாமாம்; அதை மறந்துட்டேன். தறிக்குப் போனத் தானே காசு கிடைக்கும்; வயிற்றுக்குச் சோறுங்கிடைக் கும்?.........கறியெல்லாம் முன்னியே ஆயிட்டுது. சோற். றைத்தான் உலையிலிருந்து இறக்கணும். இதோ ஆயிட் டுது, இரு. கிள் : (அ லு ப் போ டு) நீ கும்பம் கொட்டறதுக்குள்ள பொழுது சாய்ஞ்சிடும். (வெளியே போகிருன். அதே சமயம் கொங்கணவர் அவன் வீட்டைப் பார்த்த வாறே கடக்கிரு.ர்.) கிள் : (எரிந்து விழுந்து) போய்யா; பரதேசி! விட்டிலே இருக்கறவங்களுக்கே சோறு கிடைக்கல்லே. நீ வேற வந்துட்டியா பங்குக்கு? போ! போ!