பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 (இவன் போடும் கூச்சலேக் கவனிக்காமல் கொங்கணவர் போகிருர், கிள்ளுவன் அவர் பின்குலே பார்த்துஏளனமாகச் சிரிக்கிருன். இச்சமயம் கிள்ளுவன் வீட்டுக்கும் வள்ளு வர் விட்டுக்கும் இடையில் இருந்த வேப்ப மரக்கிளேயில் உட்கார்ந்திருந்த ஒரு கொக்கு அவர் மீது எச்சம் இடுகிறது. அவர் கோபத் தோடு மேலே நிமிர்ந்து பார்க்கிருர். அவரு டைய விழிக்கனலால் கொக்கு எரிந்து சாம்பலாகி விழுகிறது. கிள்ளுவன் இக் காட்சியைப் பார்த்து அதிசயிக்கிருன்..} கிள்: ஆத்தாடி! இந்தத் தாடி சாமியாருக்குத்தான் எம்புட்டு சக்தி இருக்கு? பூதகி! பூதகி இங்கே வந்து பாரேன். யாரோ ஒரு சாமியார் மரத்து மேலிருந்த கொக்கை கண்ணுலேயே எரிச்சுட்டாரு. புராணத்திலே சிவபெரு மான் திரிபுரத்தைச் சிரிச்சே எரிச்சிட்டாருன்னு சொல்ருங்களே! அது மாதிரி. - பூதகி: (உள்ளிருந்தவாறே) ஏன்யா! அப்படிக் கத்தறே? கிள்: ஊம். கொடுத்து வச்சிருந்த தானே இந்த மாதிரி காட்சியை யெல்லாம் நீ பார்க்க முடியும்? [கொங்கணவர் எரிந்து சாம்பலாய்ப் போன கொக்கின் எலும்புக் கூட்டை ஆணவமாகப் பார்த்தவாறே தி ரு வ ள் ளு வ ர் வீட்டின் முன்னே போகிறர்.) கொ: அம்மா பிச்சை தாயே! பிச்சை! (வாசுகியின் செவியில் முனிவரின் குரல் விழுந்தும் கணவருக்குப் பரிமாறுவதை இடையில் நிறுத்தி விட்டு வரமுடியாமல் . இருக்கிருள்.) . - கொ: (உரத்த குரலில்) தாயே! பிச்சை!