பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வா. (புன்னகை செய்தவாறே) கொங்கணவரே! என்னேயும் கொக்கென்று நினைத்து விட்டீரோ? (இச்சமயம் கிள்ளுவன் சாமியார் பின்னல் வந்து நிற்கிறன்.) கிள்: (மெல்ல) இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது இந்தச் சங்கதி? இவங்க வெளியே கூட வரல்லியே! (வியப்படைகிறன்.) கொ: (பெரு வியப்புற்று) ஆமாம்; இது எப்படி இந்தம்மா ளுக்குத் தெரிந்தது? (நெற்றி மீது கைவைத்து யோசிக் கிருர்.) தாயே! அகம்பாவம் என் கண்க: மறைத்து விட்டது. என் தவ வலிமையைப் பெரிதாக எண்ணிப் பெருமிதங் கொண்டிருந்தேன். ஆனல் கற்புக்கரசியான உங்கள் முன்னே என் ஆணவம் எல்லாம் பொடிப் பொடி யாகி விட்டது. என்ன மன்னித்து விடுங்களம்மா. வா: முனிவரே! நீங்கள் பெரியவர்கள். சந்தர்ப்ப உணர்ச் சிக்கு ஆளாகியதால் தான் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டது. அதைப்பற்றி வருந்தாதீர்கள். வாருங்கள்; உணவருந்த, கொ: சோற்றையும் கறியையும் இந்தக் கப்பரையில் இடுங்கள். அம்மா! நான் எடுத்துக் கொண்டு போய்ச் சாப்பிடுகிறேன். (வாசுகி தான் கொண்டு வந்த சோற்றையும் கறியையும் கப்பரையில் இட்டு விட்டு முனிவரை வணங்குகிருள். அதற்கு முன்பே காங்கணவர் வாசுகியை நோக்கி வணக்கம் செலுத்துகிருர்) . வள்: (புன்முறுவலுடன்) முனிவருக்கு என்ன! மண்டகப்படி நடந்தாற் போலிருக்கு? . |வாசுகி நாணத்துடன் மெளனமாகச் செல்கிருள்.)