பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 177:

அழகு டைய தெப்பம்கரை யோரம் வரவே விதவித மத்தாப்பு வெளிச்சங்கள் போடத் தாசி லுதாரன் கலெக்டரும் கூட முனிசிப் தாரனும் தெப்பத்தில் ஏற இவர்களும் சேர்ந்ததொரு பெரியமனு ஷாளே இப்படியே வாருமென்று கைகொடுத் தழைக்கத்

தெப்பத்தில் எல்லோரும் சந்தோஷ மாகச் சட்டமாய் மூவரும் உட்கார்ந் திருக்கக் கொட்டுமே ளக்காரன் ஒடங்கள் ஊத நெட்டிபோல் மிதந்துவரும் கிருஷ்ணருட தெப்பம். அடிக்கடி கற்பூர ஆரத்திகள் எடுத்து . - அப்பவே ஸ்வாமியும் தெப்பம்விட் டிறங்கி ஆயிரம் விதமான தாளவாத் தியங்கள் கோடியில் விட்டதொரு கொக்குவாணங்கள் கொடிமல்லி கைப்பூவு, செண்பகப் பூவு, கூடை கூடை யாஅப்போ கொண்டுவந் திறக்கிக் கோபால கிருஷ்ணரும் கோயிலுக்குத் திரும்பக் கோழி கூப்பிடறது.பாரு பலபலென்று விடிய ஆறுமணி அடிக்கவே அருனேத யத்தில் குரியமண் டலம்கிளம்பக் கிழக்குப் பக்கத்தில் நம்ப8ள ரட்சிக்க ராஜகோ பாலர் நரசிம்ம ரோடேதெய்வம் ஆடிவர அழகோ, ஏலேலோ ராஜகோபாலாகோ விந்தா, ஏலேலோ வேனுகோ பாலா!