பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனுககு

(வருணன் தன் பெண்டு பிள்ளைகளை விட்டு

விட்டுத் தேவடியாள் வீட்டுக்குப் போய்விடுவ தால் மழை பெய்வதில்லையாம். அதல்ை பிராம னப் பெண்கள் ஒரு காரியம் செய்வார்கள். களி மண்ணுல் பெண்ணுருவமும் ஆணுருவமும் செய்து, சுண்டைக்காயால் கண்கள் வைத்து, பச்சை அரிசியால் பற்கள் வைத்து, சந்தனப்

பொட்டு, குங்குமப் பொட்டு வைத்து, வேப்பிலே யைத் தலையில் வைத்துப் பூமாலை போடுவார்கள். தென்ன ஒலை, பனை ஒலை, உயர்ந்த வைக்கோல் முதலியவற்றைக் கொண்டு தீமூட்டி, அதில் அந்த இரண்டு உருவங்களேயும் போட்டுப் பாட்டுப்பாடி அழுவார்கள். இந்த அழுகை வருணபகவான் காதில் பட்டுத் தேவடியாள் வீட்டிலிருந்து திரும்பு வானம். அதனல் மழைபெய்து ஏரி கிரம்புமாம்.)

அன்னரே, பின்னரே, ஆத்திப்பூச் சூட்டாரே, மானத்து ராஜாவே, மழைகொண்டு வாராயோ? தண்ணிக் குடங்கொண்டு சரிஞ்சுவிழும் மானமே, இடிஞ்சுவிழும் மானமே! .