பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 105 வலிந்து வருந்தி முயன்று ஆண் பூக்களின் காதலுக்குத் தவம் கிடப்பதாக உங்களது பேச்சு தெரிவிக்கிறது. இது சரியா?’’ 'ஏன்? நான் சொன்னதில் என்ன தவறு? அப்படியே பெண் பூக்கள் ஆண் பூக்களின் தொடர்பை எதிர்பார்ப்பதிலும் தவறு ஒன்றும் இல்லையே-தாழ்வு ஒன்றும் இல்லையே! இயற்கையின் அமைப்பு இது. இதற்கு யார் என்ன செய்ய முடியும்.யார் என்ன கூறமுடியும்?" 'தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும். இந்தக் கருத்தை நான் முழுதும் ஏற்றுக் கொள்வதற்கில்லை. உங்கள் கருத்து வெளிப்பாடு பெண்மையைக் குறைத்து மதிப்பிடுவதாகக் காணப்படுகிறது. அதிலும் ஒரு பெண் எதிரிலேயே நீங்கள் இப்படிப் பேசுவது எனக்கு என்னவோ போல் இருக்கிறது. நீங்கள் என்னிடம் இவ்வாறு பேசுவதின் உள் நோக்கம் என்ன என்று எனக்குப் புரியவில்லை." "பெண்மையைக் குறைத்துப் பேச வேண்டும் என்று எள்ளளவும் எண்ணவில்லையே. மேலும், எனக்கு எந்த உள் நோக்கமும் கிடையாது. இது உண்மை. வேண்டு மானால், நீங்கள் தக்க காரணம் காட்டி என் கருத்துகளை மறுக்கலாமே!' 'ஆண் பூக்களிடமிருந்து மகரந்தத் துளைக் கொண்டு வருவதற்காக வண்டுகளைத் தம்பால் இழுக்கப் பெண்பூக்கள் தம்மைக் கவர்ச்சியாக வைத்துக் கொள்கின்றன என்று கூறினர்கள். அப்படியென்றால், அந்த வண்டுகள் முதலில் ஆண் பூக்களிடம் சென்றது எவ்வாறு? ஆண் பூக்களிடம் கவர்ச்சி இல்லையெனில் வண்டுகள் அவற்றினிடம் மட்டும் எவ்வாறு செல்லும்? வண்டுகள் ஆண் பூக்களிடம் இயற்கை யாகச் செல்கின்றன என்றால், அவ்வாறே பெண் பூக்களிட மும் இயற்கையாகச் செல்லலாம் அல்லவா? எனவே, பெண்