பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சுந்தர சண்முகனார் பூக்கள் வலிந்து வருந்தி முயன்று ஆண்பூக்களின் காதலைப் பெறத் தவம் கிடக்கின்றன என்ற மாதிரியில் பேசுவதை ஏற்றுக் கொள்வதற்கில்லை." 'ஊம், அப்புறம் * * "எப்படிப் பார்க்கினும் பெண் பூக்களைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. அப்படியே பெண் பூக்கள் தம்மைக் கவர்ச்சியாக வைத்துக் கொண்டிருக்கின்றன என்றாலும், பெண் பூக்கள் இருந்த இடத்திலேயேதானே இருந்து கொண்டிருக்கின்றன? ஆண் பூக்களின் மகரந்தம்தானே. வண்டு போன்ற எதன் மூலமாகவாவது பெண் பூக்களைத் தேடி வந்து அடைகின்றன. எனவே, பெண்மை ஆண்மை யைத் தேடிச் செல்வது இயற்கையின் அமைப்பாகத் தெரிய வில்லை; ஆண்மை பெண்மையை நாடி வருவதே இயற்கையின் நியதியாகத் தெரிகிறது." 'ஐயையோ! நீங்கள் பேசுவதைப் பார்த்தால், நான் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டு வேண்டுமென்றே பெண்மையைக் குறைத்து எடைபோட்டு விட்டதாக நீங்கள் எண்ணிவிட்டீர்கள் என்று தெரிகிறது. பெண் பூ எதிர் பார்த்தால் என்ன? ஆண் பூ சென்று அடைந்தால் என்ன? இதனால் ஒன்றுக்குக் குறைவு.மற்றொன்றுக்கு நிறைவு - என்பதாக ஒன்றும் இல்லை. நான் இவ்வளவு நேரம் இயற்கையைப் பற்றி, இயற்கையாகவே பேசினேன். பெண் பூ பெருமிதத்தோடு இருந்த இடத்திலேயே இருக்க, ஆண் பூவின் மகரந்தம்தான் பெண் பூவைத் தேடி அடைகிறது என்று நீங்கள் கூறிய கருத்தை நான் நூற்றுக்கு நூறு ஏற்றுக் கொள்கிறேன். பெண்மையின் பெருமையைப் போற்றுகிறேன்' "ஆண்மையைத் துாற்றவேண்டும் - பெண்மையைப் போற்ற வேண்டும் என்று நான் எதிர்பார்க்க வில்லையே."