பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 107 எது எப்படியோ போகட்டும்! பொதுவாக, ஆண் பெண்ணை நாடிச் செல்கிறது என்ற கருத்தை நான் மறுக்காது ஏற்றுக் கொள்கிறேன். அதற்குத் தக்க சான்று வேண்டுமானால், இதோ, நீருக்குள் இருக்கிற இந்த வேலம் பாசிச் செடியின் வாழ்க்கை முறையே போதும். நான் அதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்ததனால் தானே, முன்பு நீங்கள் என்னிடம் பேச்சுக் கொடுத்ததை அறியாது போனேன்,' . வேலம் பாசிச் செடியின் வாழ்க்கையை விளக்கமாகச் சொல்லுங்களேன்!' சொல்கிறேன். வேலம்பாசிச் செடியின் காதல் வாழ்வு வியப்பினும் வியப்பு: இந்தச் செடி தண்ணீருக்குள்ளேயே இருக்கும்; மேல் மட்டத்தில் தெரியாது. மேலும் இது, தனி ஓரினப் பூஞ்செடி வகையைச் சேர்ந்ததாகும். அதாவது, ஆண் வேலம் பாசிச் செடிகள் வேறு. பெண் வேலம்பாசிச் செடிகள் வேறு ஆண் செடிகளில் ஆண் பூக்கள் இருக்கும்; பெண் செடிகளில் பெண் பூக்கள் இருக்கும். இவற்றிற்குள் மகரந்தச் சேர்க்கை உண்டாக வேண்டுமே! அப்படி உண்டாக்குவதற்காக வண்டு முதலியனவும் தண்ணீருக்குள் முழுகி வரமுடியாதல்லவா? இந்த நிலையில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டுப் பெண்பூக்கள் கருக் கொள்வது எவ்வாறு? இதற்காக இம் மலர்கள் கையாளும் வழி வியப்பிற் குரிய்து. அதாவது: நீருக்குள் இருக்கும் ஆண் வேலம்பாசிச் செடியிலிருந்து பருவம். முற்றிய-உருண்டை வடிவமான ஆண் பூக்கள் பிரிந்து நீரின் மேல் மட்டத்துக்கு வந்து காதலிகளைத் தேடி-அதாவது பெண் பூக்களைத் தேடி மிதந்து திரிந்துகொண்டிருக்கும். அதேபோல, தண்ணிருக்குள் இருக்கும் பெண் வேலம் பாசிச் செடியிலுள்ள பருவம் முதிர்ந்த பெண் பூக்கள் காதலர்களைத் தேடி-அதாவது ஆண்பூக்களைத் தேடி, தாம்மட்டும் தண்டுடன் நீர் மட்டத்