பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சுந்தர் சண்முகனார் திற்கு மேலே வந்து தலையை நீட்டிக் கொண்டிருக்கும். இங்கே ஆண் பூக்களுக்கும் பெண் பூக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்றால், ஆண் பூக்கள் செடியி லிருந்து பிரிந்து தனியே வந்து, நீரின் மேலே மிதந்து திரியும்; பெண் பூக்களோ செடியிலிருந்து பிரியாமல். செடியோடு செடியாய் இருந்துகொண்டே, தாம் இருக்கும் தண்டுகளை மட்டும் மேலே உயர்த்தி நீருக்குமேல் நன்கு தெரியும்படி நீட்டிக் கொண்டிருக்கும். இந்நிலையில், ஆண் செடியிலிருந்து பிரிந்து மேலே மிதந்து கொண்டிருக்கின்ற ஆண் பூக்கள், மேலே நீட்டிக் கொண்டுள்ள பெண் பூக்களை அடைந்து மகரந்தச் சேர்க்கை கிடைக்கச் செய்யும். பிறகு பெண் பூக்கள் தண்ணிருக்குள் இறங்கிக் கருவுற்று வளரும். இயற்கையின் விந்தைதான் என்னே!" 'ஆம்! இதனை அறியும்போது மிகவும் வியப்பாய்த் தான் இருக்கிறது!' 'இப்போது உங்கள் கட்சிக்குத்தான் வெற்றியல்லவா?' 'அது என்ன வெற்றி?’’ 'அதாவது: வேலம்பாசிச் செடிகளில் பெண்பூக்கள் இருந்த இடத்திலேயே இருக்கின்றன. ஆனால், ஆண் பூக்களே செடிகளிலிருந்து பிரிந்து பெண்பூக்களைத் தேடி வருகின்றன. எனவே உங்கள் கட்சிக்குத்தான் வெற்றி. இப்போது உங்களுக்கு மனநிறைவு தானே? இனி என்மேல் வருத்தம் இருக்காது என்று எண்ணுகிறேன்'. அது சரி. நீங்கள் நெடுநேரம் வேலம்பாசிச் செடிகளை உற்று நோக்கிக் கொண்டிருந்ததாகச் சொன்னிர்களே. இப்போது இந்தத் தண்ணீரில், வேலம்பாசிச் செடியின் ஆண் பூக்களையும் பெண் பூக்களையும் எனக்குக் காண்பிக்கலாமா?'