பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 109 "ஒ இதோ பாருங்கள்! இந்தத் தெளிந்த தண்ணீருக்குள் (வேலம் பாசிச் செடிகள்) இரண்டு வேலம் பாசிச் செடிகள் தெரிவதைப் பாருங்கள்! இதோ வலக்கைப் பக்கம் இருப்பது ஆண் செடி, அதோ இடக்கைப் பக்கம் இருப்பது பெண் செடி. இதோ, ஆண் செடியிலிருந்து உருண்டை வடிவமான ஆண்பூக்கள் பிரிந்து மேல் நோக்கிச் சென்று நீரின் மேல்மட்டத்தில் மிதந்து கொண்டிருப்பதைக் காணுங்கள். அதோ, பெண் செடி தனது பூவை மட்டும் தண்டோடு தண்ணீரின் மேல் மட்டத்திற்கு நீட்டி ஆண் பூவோடு தொடர்பு கொள்வதைக் காணுங்கள்'.