பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சுந்தர சண்முகனார் ஆமாம்! மிகவும் விந்தையாய் இருக்கிறது'. 'நாம் தண்ணிரில் இறங்கிச் செடிகளைத் தொட்டுப் பார்க்கலாமா? சில பூக்களையும் கைகளில் எடுத்துப் பார்க்கலாமே!" வாருங்கள், தண்ணிரில் இறங்குவோம்'. சரி, அப்படியே செய்வோம்'. இவ்வாறு உரையாடிக் கொண்டே அறவணனும் அன்றிலும் தண்ணிரில் இறங்கினர். நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஆண்பூக்கள் இரண்டை அன்றில் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அறவணன் கைக்கு ஒரு பூவும் அகப்படவில்லை. 'ஆண் பூக்கள் உங்கள் கைக்குக் கிடைத்து விட்டனவே! ஆனால் என் கைக்குத் தான் ஒன்றும் கிடைக்கவில்லை. மேலே நீட்டிக்கொண் டிருக்கும் அந்தப் பெண் பூவைப் பறிக்கலாம் என்றால் அது என் கைக்கு எட்டாத தொலைவில் ஆழத்தில் இருக்கிறது. நான் கடினமான முயற்சி எடுத்துக்கொண்டால்தான் பெண் பூ என் கைக்குக் கிடைக்கும்போல் தெரிகிறது' என்று அறவணன் கூறினார். அவர் கூறுவதில் இருபொருள்' இருப்பதாக எண்ணி அன்றில் புன்முறுவல் பூத்துக்கொண்டே தலையை நட்டுக்கொண்டாள். அப்போது, அந்தப் பொய்கையின் எதிர்க்கரையிலே இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பதற்காகப் புகைப்படக் கருவிகளுடன் இருவர் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்றிலும் அறவணனும் அவர்களைப் பார்த்ததும், 'நம்மைப் படம் பிடித்து விடுவார்களோ என்னவோ என்று நடுங்கினர். அந்த நேரத்தில், சுற்று வட்டாரத்தில் இருந்த மக்கள் அங்கே வந்து சூழ்ந்து கொண்டனர். திரைப்படம் பிடிப்பவர்கள் அங்கே வந்திருப்பதாகவும், காதலனும்