பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சுந்தர சண்முகனார் தெரியும்? ஒரு பெண் ஒர் ஆணுடன் நட்பு முறையில் பழகினாலும், பின்னர் அது காதலாக மாறக்கூடும்; காதல் கள்ளக் காதலாகி உடல் உறவு கொள்ளச் செய்யும்; பிறகு ஊர் சிரித்துப் போகும். எனவே தான், இப்போதே உன்னைத் திசை திருப்பி வேறொருவனுக்கு மணம் செய்து கொடுக்கத் தீர்மானித்துவிட்டேன். எனவே, இந்தக் கடிதம் கண்டதும் விடுமுறை எடுத்துக் கொண்டு உடனே புறப்பட்டு ஊர் வந்து சேர்வாயாக. இனி நீ எதற்கும் வருந்த வேண்டாம் - கவலைப்படவும் வேண்டாம். எல்லாம் நல்ல விதமாகவே முடியும். நீ மனத்தை மாற்றிக்கொண்டு தவறாமல் வருக! அஞ்சாமல் வருக! நான் உன்னை மகிழ்ச்சியோடு வரவேற்கக் காத்திருக் கிறேன். வருக! வாழ்க! இன்னணம், உன் அன்புள்ள தந்தை, மாசிலாமணி, கடிதத்தைப் படித்து முடித்த அறவணன் பெரு மூச்செறிந்து கலங்கிய உள்ளத்துடன் - கவலை தோய்ந்த முகத்துடன் அன்றிலை ஏறிட்டுப் பார்த்தார். அப்போது அன்றில் தன் கண்களில் ததும்பும் நீர்த்துளிகளைத் துடைத்துப் பிறர் அறியாமல் மறைக்க முயன்று கொண் டிருந்ததை அறவணன் அறிந்து வருத்தப்பட்டார். மகா பலிபுரத்தில் எதிர்பாராமல் என்னோடு பழக நேர்ந்ததனால் தான் உங்களுக்கு இவ்வளவு தொல்லை ஏற்பட்டுள்ளது. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்! இனிநான் உங்களுடன் எந்தக் காரணத்தை முன்னிட்டும் எங்கும் என்றும் எந்தத் தொடர்பும் கொள்ளவே மாட்ட்ேன். இதுமட்டும் அல்ல. இனி, திருமணம் ஆகாத எந்தப் பெண்ணுடனும் பழகப்