பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சுந்தர சண்முகனார் விட்டார். இனி அவள் பேச்சுக்குப் போகவே கூடாது என்று உறுதி செய்துகொண்டார். அப்போது மணியோ ஐந்துக்குமேல் இருக்கும். வண்டி லால்குடியைத் தாண்டிக் காட்டுர் நிலையத்தை நோக்கி ஒடிக்கொண்டிருந்தது. மேலுங் கீழும் படுத்து உறங்கிக் கொண்டிருந்த மாபெருந்திருமேனிகள் எல்லாம் எழுந்திருக்கத் தொடங்கின. விழித்துக்கொண்ட அவர்கள் அரே புரே! என்று அழகு மொழி பேசிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் மாறி மாறி அந்தப் பெண்ணின்மேல் பார்வையைச் செலுத்தி நோட்டம் பார்த்தார்கள். ஆனால் அவள் பார்வையில் எவரும் அகப்படவேயில்லை - அவள் பார்த்தால்தானே! சிறிது நேரம் சென்றதும் அவர்கள் கண்களுக்கு அவள் பழக்கப்பட்ட பழம்பொருளாகிவிட்டாள். அதன் பிறகு அவர்கள் அவள்மேல் சிறப்புப் பார்வை எதுவும் செலுத்தவில்லை. குடுண்ட பூனையாகிய இளைஞரோ, போதி மரத்துப் புத்தனைபோலக் கண்களை முடிக்கொண்டு. ஆழ்ந்த அமைதிக்குள் மூழ்கியவரைப் போல நடித்துத் தூங்காது தூங்கிக்கொண்டிருந்தார். அவள் எவ்வளவு நேரந்தான் வாய்பேசாது வாளா உட்கார்ந்திருப்பாள்? இப்போது அவளுக்கும் ஒரு துணை தேவைப்பட்டது. நெடுந்தொலைவு தனித்துப் பயணஞ் செய்வோர்க்கு ஒரு பொழுதுபோக்குத் துணை தேவைதானே! எப்போதுமே தனிமை நிலைத்திருக்க முடியாது - அது வெற்றி பெறவும் முடியாது - எந்த உருவத்திலாவது அது ஒரு துணை தேடிக்கொள்ளத்தான் செய்யும். தனிமை நீடிக்க நீடிக்கக் கூடி வாழவேண்டும் - சேர்ந்து வாழவேண்டும் என்ற கூட்டுணர்ச்சி தோன்றியே திரும், எனவே, சுவரோவியமாக இருந்த அந்தப் பேசாமடந்தை. இப்போது ஒரு துணையை நாடுவதில் வியப்பில்லையே. ஆனால், அவள் எந்தத் துணை யைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது? அந்தப் பெட்டியில்