பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விதத் திருமணம் 15 பெண்ணுக்குப் பெயர் இருக்கிறதென்றால், அப்பெயர் அவளுக்கு எப்படி வைக்கப்பட்டிருக்கக் கூடும்? குயில் என்னும் பொருளில் கோகிலம் - கோகிலாம்பா என்றும் கிளி என்னும் பொருளில் தத்தை (வாசவதத்தை) என்றும் வடமொழியிலும், மைனா என்பது போன்ற பொருளில் “Gosfilliq isłłóð’ (Florence Nightingale) grows so,51630.33 gyub, (சில மாவட்டங்களில்) கிளியம்மா, குயிலாம்பா, மயிலாம்பா என நம் அழகு தமிழிலும் பறவைகளின் பெயரிட்டுப் பெண்களை அழைப்பது வழக்கத்தில் இருக்கிறது. ஆனால் அன்றில் என்னும் பெயரால் அழைக்கும் வழக்கம் எங்கும் இல்லையே. ஆங்கில நாட்டு நைட்டிங்கேல் இரவில் பாடும் பறவையாம். ஒருவேளை அதுதானோ நம் அன்றில்? அன்றில் இரவில் ஒலிப்பதாக நம் சங்கப் புலவர்கள் எழுதி வைத்துள்ளனரே. இப்பறவையின் பெயரை இவள் ஒருத்திதான் பெற்றுப் பெருமையுற்றுத் திகழ்கிறாளோ? 'அன்றில் என்னும் அழகுப் பெயரை இவளே நடுவில் வைத்துக் கொண்டிருந்தால், இவள் நன்கு தமிழ் கற்றவளா யிருக்கவேண்டும். அல்லது இவள் தந்தையார் இட்ட இயற் பெயர் என்றால். அவர் நன்கு தமிழ் கற்றவராயிருக்க வேண்டும். ஏதோ எப்படியோ இவள் குடும்பத்திற்கும் தமிழ்க் கல்விக்கும் மிகுந்த நெருக்கம் இருக்கிறது. வேறு ஒரு குடும்பத்தில் இப்படி ஒரு புதுப்பெயர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க முடியாது. அன்றில் எம்.ஏ. படித்தவள். எம்.ஏ. படித்த ஒரு பெண்ணா ஆடவரோடு பேச இவ்வளவு கூசுகிறாள்? படிப்பறியாத பட்டிக்காட்டுப் பெண்கூட இயற்கையாய்ப் பழகினாலும் பழகுவாள் போல இருக்கிறதே. இவள் இப்படி அஞ்சுகிறாளே! பேசினால் வெல்லத்தில் வைத்தா விழுங்கி விடுவார்கள்? அச்சமோ அல்லது ஆணவமோ? யாரறிவார்? இவள் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த