பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சுந்தர சண்முகனார் கூடமுடியாது போய்விட்டால் இறந்துபோகுமாம். ஒன்றிய காதலர்க்கு ஒப்புமை கூறுதற்கேற்ற விலை மதிக்க முடியாத பொருள் அன்றில், அன்றில்போல் ஒன்றி வாழ்க’ என்று திருமண மக்களுக்கு வாழ்த்து வழங்குவதற்குப் பயன்படக் கூடிய பொருள் அன்றில். தமிழ் இலக்கியங்களில் அன்றிலைக் காணலாம். அவற்றுள்ளும் பழங்காலச் சங்க இலக்கியங்களில் அன்றிலைப் பற்றி மிகுதியாகக் காணலாம். அன்றில் கருநிறம் உடையதாம். அதன் தலையில், நெருப்புப்போல்' சிவந்த - பூப்போலும் தோற்றமுடைய கொண்டை இருக்குமாம். அதன் அலகுவாய் இறாமீன்போல் வளைந்து நுனி கூராயிருக்குமாம். கால்கள் மிகவும் கறுத்திருக்குமாம். தைத்து உணவு வைத்து உண்ணுவதற்கேற்ப அகலமா யிருக்கிற இலைகளையுடய தடவு என்னும் ஒருவகை மரத்திலாவது, புலவர்களால் பெண்ணை என்று அழகு படுத்திச் சொல்லப்படுகின்ற பனைமரத்திலாவது அந்தப் பறவை கூடுகட்டி வாழுமாம். ஆண் சிறிது நேரம் பிரிந் திருந்தாலும், பெண் அதனைக் கூவிக் கூவி அழைத்துக் கொண்டேயிருக்குமாம். நள்ளிரவில், பிரிந்து வருந்துகிற காதலர்கள் கேட்டுக் கேட்டு ஏங்கி இளகும்படி இரண்டும் காதல் களியாட்டப் பண்ணொலி எழுப்புமாம். பிரிந்து தனித்திருக்கின்ற காதலர்கள் என்றும் ஒன்றியிருக்கிற அன்றில் இணையைப் பொறாமைக் கண்களுடன் பார்த்து, இவை பெற்ற பேறு நாம் பெறவில்லையே' என்று பெரு மூச்செறிந்து நைந்து உருகுவார்களாம். இந்தச் செய்திக ளெல்லாம் தமிழிலக்கியம் கற்றவர்க்குத் தண்ணீர் பட்ட பாடு. ஆனால், தமிழர்களுள் தமிழிலக்கியம் கற்றவர்கள் எத்தனை பேர்? அது கிடக்கட்டும்! கோழி, காகம் முதலிய பறவைகளை அனைவரும் அறிந்து வைத்திருப்பதுபோல, அன்றிலைப் பற்றி அறிய மாட்டார்கள். அப்படியிருக்க, அன்றில் என்று ஒரு