பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 23 3 மறுநாள் திங்கட்கிழமை காலை ஒன்பது மணிக்கு, சென்னை அரசினர் கலைக் கல்லூரியில், பல ஊர்ப் பட்டதாரிகள் கூடியிருந்தனர். ஏறக்குறைய இருபது பேர் இருக்கலாம். அவர்களுள் பெரும்பாலோர் இளைஞர்களே. அக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பதவிக்கு ஒருவர் தேவைப்பட்டார். அதற்காகச் செய்தித் தாட்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. பலர் விண்ணப்பம் அனுப் பினர். அவர்களுள் ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு "இன்டர்வியூ என்னும் நேரடித் தேர்வுக்காக (Interview) அழைக்கப்பட்டனர். அவர்களே இவர்கள். கல்லூரியின் கூடம்ஒன்றில் ஒவ்வொருவராய் வந்தமர்ந்த வேலை விரும்பிகளுள் அறவணனும் ஒருவர். அவர் வந்த போது அங்கே போடப்பட்டிருந்த இருக்கைகள் எல்லாம் ஏறக்குறைய நிரம்பியிருந்தன. வருபவரை வரவேற்று அமரச் செய்து கொண்டிருந்த அலுவலர் ஒருவர், அறவணனுக்கு ஒர் இருக்கையைக் காட்டி அதில் அமரச் சொன்னார். அறவணன் அங்கு அமரச் சென்றபோது பக்கத்து இருக்கையில் ஒரு பெண் இருக்கக் கண்டார், அன்றில்தான் அவள். உடனே அங்கு அமராமல், அவளுக்கு நேர் எதிர்ப்புறத்தில் இருந்த ஒர் இருக்கையில் அவர் அமர்ந்து கொண்டார். இந் நிகழ்ச்சி, தன்மேல் அன்றில் பெருமதிப்பு கொள்ளும் அளவிற்கு அறவணனை உயர்த்தி விட்டது. புகைவண்டியில் அவரிடம் நாம் நேற்று நன் முறையில் பேசாததால், அவர் நம்மேல் உறைப்புக்கொண்டு இங்கு இவ்வாறு நடந்துகொண்டார் என்று அன்றில் புரிந்து கொண்டாள். வேலை நாடி அங்குக் கூடியிருந்தவர்களுள் அன்றில் - ஒருத்தியே பெண். அவள் யாருடன் பேசுவது? மற்ற ஆடவர்