பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சுந்தர சண்முகனார் கொண்ட விதத்தினால் ஏற்பட்ட குறையை இன்று நிறை செய்துவிட்டோம் என்ற மனத்திருப்திதான் அது. அவளுக்கு அறவணனைப் பற்றி அக்கறை ஒன்றும் இல்லை. அவர்மேல் அன்போ - அல்லது - காதலோகூட கிடையாது. 'ஒரு படித்த பெண், ஒரு படித்த ஆடவர் பேச்சுக்கொடுத்தால் இப்படித்தானா பட்டிக்காட்டுத்தனமாய் நடந்துகொள்வது', என்று அவர் தன்னைப் பற்றி மட்டமாக மதித்துவிடாமல் இருக்கவேண்டும் - என்ற ஒரே தாழ்வுச்சிக்கல் (Inferiority) . எண்ணந்தான் அவளை இவ்வளவு தூரம் ஆட்டிப்படைத்தது. இனியொரு முறை அறவணனைக் காணவேண்டுமென்ற கவலையோ - அவரோடு பேசி அளவளாவ வேண்டுமென்ற ஆர்வமோ அவளுக்கு இல்லை. நேற்று இல்லாமல், இன்றைக்கு ஒரு மணி நேரமாய் அவளுக்கு இருந்து வந்த ஒரு சுமை இப்பொழுது இறங்கிவிட்டது. மனநிறைவுடன் இல்லம் ஏகினாள். அன்றிலைப் போலவே அறவணனும் தனக்குத்தானே திருப்திபட்டுக் கொண்டார். புகைவண்டியில் ஒரு புதிய இளம் பெண்ணிடம் தானாக வலியச் சென்று பேச்சுக் கொடுத்த செயல் அதுவரை உறுத்திக்கொண்டே யிருந்தது. மேலும் அந்தப் பெண்ணிடமிருந்து சரியான முறையில் பதில் வராது போகவே, தான் ஏதோ தகாத முறையில் நடந்து கொண்டதாக - பெரிய தவறு செய்து விட்டதாக அஞ்சித் தன்னுள்தானே வருந்திக்கொண்டிருந்தார்; இனி எப்போதும் எந்தப் பெண்ணிடமும் காரணமின்றி வலிந்து பேசக்கூடாது என்று உறுதியும் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த உறுதியின் ஒரு கூறுதான் இன்று அன்றிலிடம் நடந்து கொண்ட மாதிரியாகும். மேலும், தன்னை ஓர் அற்பன் அயோக்கியன், கயவன் - கசடன் என்று அன்றில் இழிவாக எண்ணியிருப்பாள் என்ற ஐயமும் அச்சமும் அறவணனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன. ஆனால் இன்று