பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விக த் திருமணம் 31 அவளை நேரிட்டுப் பார்க்காத நெஞ்சுறுதியின் மூலம் - அவள் பேசியும் தான் வாய்விட்டுப் பேசாத வைரம் பாய்ந்த மனவுறுதியின் மூலம், தன்னைத் தூயவன் என்று அவள் எண்ணும்படிச் செய்துவிட்டார். அது போதும். நேற்றி விருந்து அவர் உள்ளத்தை உறுத்தி வருத்திக்கொண்டிருந்த ஒரு பெரும்புண் இன்று ஆறிவிட்டது. இனி அவள் தொடர்பான கவலை அவருக்கு ஒன்றும் இல்லை. ஆனால், நேற்று நம்மை ஏறிட்டுப் பார்க்காதவளை இன்று நாம் பார்க்கக் கூடாது - நேற்று நம்முடன் பேசாதவளோடு இன்று நாம் பேசக்கூடாது என்ற வரட்டு வைராக்கியமோ - பழிவாங்கும் உணர்வோ அறவணனுக்கு இருந்ததில்லை. நேற்று செய்த தவறை, இன்றைய ஒழுங்கு நீர்மையால் கழுவித் துய்மை செய்துவிடவேண்டும் என்ற ஒரே நல்லெண்ணந்தான்! அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். அதனால் அகமகிழ்வுடன் தங்குமிடம் சேர்ந்தார்.