பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சுந்தர சண்முகனார் 4. மறுநாள் செவ்வாய்க்கிழமை முற்பகல் சென்னை எழும்பூர்ப் பெருநிலையத்திலிருந்து 10-45 மணிக்குப் புறப் பட்ட இராமேசுரம் பயணிகள் வண்டி 11-14 மணிக்குத் தாம்பரம் நிலையத்தில் வந்து நின்று, மீண்டும் 11-17 மணிக்குப் புறப்படத் தயாராயிருந்தது. அப்போது ஓர் இளைஞர் வேகமாக ஓடி வந்தார். புகைவண்டி அசையத் தொடங்கியது, மூன்றாவது வகுப்புப் பெட்டி ஒன்றின் கதவைத் திறந்தார்-திறக்க முடியவில்லை; மீண்டும் திறந்தார்-முடியவில்லை; மீண்டும் மீண்டும் திறந்து திறந்து பார்த்தார் - முடியவேயில்லை. வண்டியோ நகர்கிறது. இந்தக் காட்சியை உள்ளிருந்தவாறு பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண் இரக்கப்பட்டு, தன் இருக்கையிலிருந்து கதவண்டை வந்து, ஏதோ ஒரு பிடியைத் திருப்பிப் பார்த்தாள். நல்ல வேளையாகக் கதவு திறந்து கொண்டது. உடனே இளைஞர் ஏறிக்கொண்டார். வண்டியில் ஏறிய இளைஞர், கதவு திறக்க உதவி செய்த பெண்ணைக் கண்டதும் திடுக்கிட்டார். இதுவரையும் கதவைத் திறப்பதிலேயே அவருடைய கண்களும் கருத்தும் இருந்தன - திறக்க உதவிக்கொண் டிருந்த உருவத்தைக்கூட கவனிக்கவில்லை. வண்டியில் ஏறக்கொண் டிருந்தபோது தான் கவனிக்கத் தொடங்கினார். இரண்டு உருவங்களும் எதிர் எதிராய்ச் சந்தித்துக் கொண்டன. அறவணனும் அன்றிலுந்தான் அவ்வுருவங்கள். கதவு திறக்க உதவிய அன்றிலுக்கு அறவணன் நன்றி சொல்லியாக வேண்டுமே. அவர் வாய் திறந்து பேசத் தயங்கினார் - இல்லையில்லை - என்ன செய்வதென்று ஒன்றும் ஓடாமல் திகைத்தார். நேற்றுக்கு முன்தினம் திருச்சி நிலையத்தில் அவள் வண்டியேறுவதற்குக் கதவு