பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சுந்தர சண்முகனார் வண்டி பெருங்களத்தூர் நிலையம் போய் நின்றது. அங்கே கிழவர் குடும்பம் இறங்கிக் கொண்டது. கிழவர் குழுவினர் இறங்குவதற்குள்ளாகவே பலகணியின் வழியாக முட்டை முடிச்சுகளை உள்ளே எறிந்து கொண்டிருந்த ஒரு திருமணக் கூட்டம் உடனடியாக ஏறி, எள்விழ இடமில்லாத படி எல்லாப் பகுதியையும் பிடித்துக் கொண்டது. அத் திருமணக் கூட்டத்தினர் ஏறியபோது, குறிப்பிட்ட அந்தப் பகுதியில் உள்ளேயிருந்தவர்கள் அன்றிலும் அறவணனுந் தாம். விலகி அமர்ந்திருந்த அவ்விருவரும், புதுக்கூட்டம் வந்து நெருக்கியதும் சிறிது நெருங்கி அமர்ந்துகொண்டார் கள். அதாவது, பலகணி (சன்னல்) ஒரமாக அன்றிலும் அவளை அடுத்து அறவணனுமாக உட்கார்ந்திருந்தார்கள். அறவணனை அடுத்து, புதுக்கூட்டத்தினருள் சிலர் புளிக் கட்டுபோல் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அன்றிலுக்கும் அறவணனுக்கும் நேராக எதிர்ப்பலகையில் புதுப்பெண்ணும் புதுமாப்பிள்ளையும் உட்கார்ந்திருந்தனர். அவர்களை யடுத் தும் புளிக்கட்டுகள் இருந்தன. பெண்ணும் பிள்ளையும் மாப்பிள்ளை இல்லத்தில் மணமுடித்துக் கொண்டு, பெண் வீட்டிற்கு மருவுக்காகச் செல்கின்றனர் போலும்! பெண்ணும் பிள்ளையும் அன்றில் அறவணன் கண் களுக்கு விருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பெண் பெரும்பாலான நேரம் தலைகுனிந்து கொண்டிருந்தாள். அவள் அடிக்கடி தன்னைப் பார்க்கமாட்டாளா என்று ஏங்கி மாப்பிள்ளை அவளை அடிக்கடிப் பார்ப்பார். மாப்பிள்ளை யின் ஐந்தாறு பார்வைக்கு ஒருமுறை பெண் அவரை ஒரக் கண்ணால் பார்ப்பாள். அப்போது மாப்பிள்ளை சிரிப்பார். அவள் உதடுகளும் மெல்ல மலரும். அடுத்தடுத்து இந்தக் காட்சியைக் காணும்போதெல்லாம், அன்றிலும் அறவணனும் தாங்களும் ஒருவரையொருவர் நோக்கிப் புன்னகை உதிர்ப்பர்.