பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 37 காரன் கேட்டான். 'இல்லை, இருபத்தைந்து காசு (நான்கணா) திட்டாக இருக்கிறது என்று அறவணன் சொன்னார். அப்படியென்றால் என்னிடம் ஐந்து காசுக்கு மேல் சில்லறை இல்லை' - என்று சொல்லிச் சோடாக்காரன் நழுவத் தொடங்கினான். உடனே அன்றில், இதோ என்னிடம் சில்லறை இருக்கிறது என்று சொல்லி, பத்துக் காசை எடுத்துச் சோடாக்காரன் கையில் கொடுத்தாள். அவன் ஒரு சோடாவைத் திறந்து அன்றில் கையிலேயே கொடுத்துவிட்டான். அவள் அதை அறவணன் பக்கம் நீட்டினாள். அவர் வாங்காமல், நீங்கள் சாப்பிடுங்கள்' என்றார். எனக்கு வேண்டாம் என்று அவள் அவர் பக்கத்தில் வைத்துவிட்டாள். அறவணன் அதைக் கையில் எடுத்துக்கொண்டு, இன்னொரு சோடா கொடு என்று சோடாக்காரனிடம் கேட்டார். எனக்கு வேண்டவே வேண்டாம் என்றாள் அன்றில். இருக்கட்டும் நீ கொடு’ என்றார் அறவணன். சோடாக்காரன் இன்னொன்றை எடுத்துத் திறந்து அன்றில் கையில் கொடுத்தேவிட்டான் - அவளும் வாங்கிக் கொண்டாள். உடனே அறவனன், சோடாக்காரனிடம் முன்னமே இருந்த ஐந்து காசு, அன்றில் தந்த பத்துக்காசு - ஆகிய பதினைந்து காசுகளை வாங்கிக் கொண்டு, தன்னிடமிருந்த இருபத்தைந்து காசுத் திட்டை அவனிடம் கொடுத்தார். சோடா குடித்து முடிந்ததும், காலிப் புட்டிகளை வாங்கிக் கொண்டு அவன் அவ் விடத்தினின்றும் அகன்றான். அங்கிருந்த திருமணக் கூட்டத்தாருக்கு இதைக் கவனித்துக் கொண்டிருக்க நேரம் இல்லை. அடுத்த நிலையத்தில் இறங்குவதற்கு வேண்டிய ஆயத்தங்களை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். சோடா நிகழ்ச்சியின் பிறகு, அன்றிலுக்கும் அறவணனுக்கு மிடையே ஒருவகை அன்பு அரும்பத் தொடங்கியது. புகைவண்டி சிங்கப்பெருமாள் கோயில் நிலையத்தில் போய் நின்றது. திருமணக்கூட்டம் இறங்கிக்கொண்டது,