பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சுந்தர சண்முகனார் அங்கே புதிதாக யார்யாரோ ஏறினர். தனக்கும் அன்றிலுக்கும் இடையே இப்போது நல்ல சூழ்நிலை உருவாகி யிருப்பதால் அவளிடம் அறவணன் பேச்சுக்கொடுத்தார்: நீங்கள் திருச்சிக்குச் செல்கிறீர்களா?” "ஆமாம்' 'திருச்சியே சொந்த ஊரா? அல்லது வேறு ஏதாவது...' 'திருச்சியே சொந்த ஊர்தான்.' 'திருச்சி நகரம்ா? அல்லது அதைச் சார்ந்த ஏதேனும், சிற்றுாரா?' "திருச்சி சந்திப்பை ஒட்டி எங்கள் இருப்பிடம் உள்ளது. நீங்களும் திருச்சிக்குத்தான் செல்கிறீர்களா?” "ஆமாம்! நானும் உங்கள் ஊருக்குத்தான் வருகிறேன். அப்படியென்றால் உங்கள் சொந்த ஊர்...?? 'காரைக்குடி' 'காரைக்குடிக்குத் திருச்சி வழியாகத்தானே செல்ல வேண்டும்? இந்த வண்டியே நேராகக் காரைக்குடிக்குச் செல்லுமே! நீங்கள் திருச்சியில் இறங்க வேண்டியது கூடத் தேவையில்லையே!' 'உண்மைதான்! என்றாலும், எனக்குத் திருச்சியில் கொஞ்சம் வேலை இருப்பதால் ஒருநாள் தங்கிப்போவேன்' என்று இருவரும் பேசிக்கொண்டே வந்தபோது, புகைவண்டி 12-20 மணிக்குச் செங்கல்பட்டு நிலையம் வந்து சேர்ந்தது, அங்கே இருபது நிமையம் நிற்கும். நண்பகல் உணவு கொள்ளவேண்டிய நேரம் இது. இந்தச் செங்கல்பட்டு சந்திப்பு நிலையத்தையும் - இந்த இருபது நிமைய இடைவெளி நேரத்தையும் தவறவிட்டால், உணவு கொள்ள வேறு வாய்ப்பே இல்லை. அதனால் அறவணன் சொன்னார்: