பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விதத் திருமணம் 47 ஓ அதுவா! அதைப் பற்றிய கவலை எனக்கில்லை. என் தந்தையார் கோவை சென்றுள்ளார். ஊர் திரும்பிவிட்டி ருந்தால் அவர் வருவார்-இல்லாவிடின் வேறு யாராவது புகைவண்டி நிலையத்திற்கு வந்திருப்பார்கள்.' 'நீங்கள் இந்த வண்டிக்கு வருவது அவர்களுக்கு எப்படி தெரியும்?" நான் வீட்டிலிருந்து முந்தாநாள் புறப்பட்ட போதே, இன்றைக்கு இந்த வண்டியில் வந்துவிடுவதாகச் சொல்லிப் புறப்பட்டேன். என் தாயாருக்கு உடல் நலம் இல்லாததால், சென்னையில் வேலை முடிந்ததும் மறுதாளே புறப்பட்டு வரவேண்டும் என்று சொல்லியனுப்பினார்கள். இல்லாவிடின், இப்போது கோடை விடுமுறையாயிருப்பதற்கு, இன்னும் சில நாட்கள் சென்னையில் தங்கிவருவேன்' என்று சொல்லி, முகம் தூய்மை செய்து வருவதற்காக, அந்த வண்டிப் பெட்டியின் மற்றொரு பகுதிக்கு அன்றில் சென்றாள். அறவணனுக்கு மனம் ஒன்றும் சரியில்லை; தன்னை ஒரு பிச்சைக்காரன் போல் எண்ணித் தனக்குத் தானே வெட்கி உள்ளங் கூசி உடல் குன்றினார். அன்றிலிடம் உணவு வாங்கி உண்டது அவரது உயிரை வாள் போல் ஈர்த்தது. அதற்காக ஏதேனும் ஒரு கைம்மாறு செய்து விடவேண்டும் என்று துடித்தார். அவளிடம் உணவு வாங்கி உண்டதுங்கூட, பிறகு ஏதேனும் ஒரு பதில் உதவி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையால்தான்! ஆனால் அவளோ, கொடுத்த புத்தகத்தை எடுத்துக் கொள்ளாது மறுத்துவிட்டாள். இப்போது என்ன செய்வது! எப்போதும் அறவணன் ஒருவரிடம் ஒர் உதவி பெற்றால் திரும்ப அவருக்குப் பதிலுதவி செய்வதற்குரிய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பார்; வாய்ப்பு வந்தபோது அவ்வுதவியைச் செய்துவிட்டுத் தான் மறுவேலை