பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சுந்தர சண்முகனார் பார்ப்பார். இல்லாவிட்டால் அவருக்குத் தலைவெடித்து விடும்! இவ்வாறு பதிலுதவி செய்யவேண்டியது தேவை தானா? - கட்டாயந்தானா? அப்படியென்றால் உலகத்தில் அன்பு என ஒன்றுமே கிடையாதா? பண்பு என எதுவுமே இல்லையா? பதிலுதவி செய்வது என்பது, ஒன்று கொடுத்து ஒன்று வாங்கும் ஒருவகைப் பண்டமாற்று வாணிகம் அல்லவா? உலகம் இப்படியே போய்க்கொண்டிருந்தால், உயிர்களுக்குள் உறவு-ஒற்றுமை - ஒப்புரவு என ஒன்றுமே இல்லையா? எல்லாம் எழுத்தாளர்களின் ஏட்டோடு சரியா? கவிஞர்களின் கற்பனைக் கனவோடு முடிந்துவிட்டனவா? இவையெல்லாம் அறவணனுக்கு ஏன் தெரியவில்லை? தெரியும் அறவணனுக்கு நன்றாகத் தெரியும். இந்தத் துறையில் அவர் இதற்கு முன்பே கொட்டுப்பட்டிருக்கிறார். தான் விரும்பாமல் இருந்தும், தற்செயலாகத் தனக்கு வேண்டாத-தேவையில்லாத உதவியைச் செய்த சிலர், தன்னைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் - தன்னை எப்படி நடத்துகிறார்கள் - என்பதை அவர் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார். ஒருவன் நமக்கு மூன்று காசுக்கு மோர் வாங்கிக் கொடுத்துவிட்டால், ஏதோ இமயமலையையே நமக்கு எழுதி வைத்து விட்டதாக நினைக்கிறான். அவன் எண்ணுகிறபடி யெல்லாம் நாம் இயங்க வேண்டும் - ஏன் - மூன்று காசுக்கு மோர் வாங்கிக் கொடுத்து விட்டானே? அவன் சொல்வனவெல்லாம் கேட்க வேண்டும் - ஏன் - மூன்று காசுக்கு மோர் வாங்கிக் கொடுத்து விட்டானே! அவன் செய்கின்றவற்றையெல்லாம் பாராட்ட வேண்டும் - ஏன்-மூன்று காசுக்கு மோர் வாங்கிக் கொடுத்து விட்டானே! பொய்ச் சான்று சொல்லச் சொன்னால் சொல்ல வேண்டும்