பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 49 தகாத செயல் செய்யச் சொன்னால் செய்ய வேண்டும். மூன்று காசுக்கு மோர் வாங்கிக் கொடுத்த மூன்றாவது மணி நேரமே பதில் உதவிக்கு வந்து விடுவான். நாம் செய்ய வில்லையென்றால், செய்ந்நன்றி கொன்ற சிறுநரி-நன்றி மறந்த நாய் என்றெல்லாம் பட்டங்கள் பல சூட்டிவிடுவான். அவன் சொல்வதற்கேற்ப, நன்றி மறந்த நயவஞ்சகர்களும் இருக்கத்தானே செய்கின்றார்கள். எனவே, அவன் மூன்று காசுக்கு மோர் வாங்கிக் கொடுத்திருந்தால், நாமும் மூன்று ஒன்பது காசுக்கு மோர் வாங்கி, அவன் வேண்டாமென மறுத்தாலும். அவன் வாயில் குழாய் வைத்தாவது வயிற்றில் ஊற்றிவிட வேண்டும். இல்லாவிடின், அவன் நம்மை நினைக்கும் போதெல்லாம் மூன்று காசு மோரையும் நினைப்பான்-நம்மைக் காணும்போதெல்லாம், மூன்று காசு மோர் எனப் பெரிய எழுத்தில் எழுதி நம் நெற்றியில் ஒட்டி யிருப்பதாக அவன் கண்களுக்குத் தெரியும் - நம்மோடு பேசும் போதெல்லாம், அவன் வாய் மூன்று காசு மோரைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டிருக்கும். அவன் மட்டுமல்ல-அவன் உறவினரும் பங்குக்கு வருவர். இவன் நம் அண்ணனிடம் மூன்று காசு மோர் குடித்தவன் - அவன் நம் தம்பியிடம் மூன்று காசு மோர் குடித்தவன் - இவன் நம் மாமாவிடம் மூன்று காசு மோர் குடித்தவன் - அவன் நம் மைத்துனனிடம் மூன்று காசு மோர் குடித்தவன்' - என்று அவன் பங்காளி களும் சம்பந்திகளுங்கூட நம் தலையை உருட்டுவார்கள். அவனிடம் மூன்று காசு மோர் வாங்கிக் குடித்ததற்காக,அவன் உறவினர்க்கும் நாம் நல்லவராய் - நன்றி உடையவராய் நடந்து கொள்ளவேண்டும். அவர்கள் ஏசினாலும் பேசினாலும் கேட்டுக்கொள்ள வேண்டும் - அவர்களையும் திருப்திபடுத்த வேண்டும். எல்லாம் மூன்று காசு மோர் செய்யும் வேலை.