பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சுந்தர சண்முகனார் அம்மம்மா! மூன்று காசு மோருக்கே இந்தப் பாடு என்றால், இன்னும் பெரிய உதவியாயிருந்தால் என்ன பாடோ? நாம் வேண்டாம் என மறுத்தும் நமக்குத் தேவை யில்லாதிருந்தும் அவனாக வலிய வந்து செய்த சிறு உதவிக்கே இவ்வளவு கடமைப்பட்டிருக்கிறோம் என்றால், நாமாகக் கெஞ்சி, ஒரு நடைக்கு ஒன்பது நடை அவன் வீட்டிற்குக்காவடி எடுத்து, ஆடிப்பாடி, குழைந்து கும்பிட்டுப் பெற்ற பெரிய உதவிக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக் கிறோமே! பிறைரைச் சொல்வது ஏன்? நம் பெற்றோரே-நமக்குத் தெரியாமல் நாம் விரும்பாமல் தாங்களாகவே நம்மைப் பெற்ற நம் பெற்றோரே-வலியப் பெற்ற காரணத்திற்காகப் பேணி வளர்க்கக் கடமைப்பட்டுள்ள நம் பெற்றோரே தாங்கள் செய்த உதவியை நம்மிடம் சொல்லிக்காட்டு கிறார்களே! உன்னை அப்படி வளர்த்தேனடா-இப்படி வளர்த்தேனடா! உனக்கு அவ்வளவு செய்தேனடி-இவ்வளவு செய்தேனடி!' என்று பெற்றோரே பிள்ளைகளை ஏசிப்பேசி இடித்துக்காட்டுகின்றார்களே! அப்பப்பா, ஒருவரிடம் உதவி பெறுவது மிகக் கொடிது? அந்த உதவியைத் திரும்பச் செய்யாதது அதனினும் மிக மிகக் கொடிது கொடிது! எனவே, இவற்றை யெல்லாம் முன் கூட்டியே பட்டறிந்து வைத்திருந்த அறவணன், தான் அன்றிலிடம் பெற்ற உதவிக்குப் பதிலுதவி செய்துவிடவேண்டும் என்று துடியாய்த் துடித்ததில் வியப்பென்ன? அந்த உதவி எந்த உருவத்தில் இருப்பது? உணவுக்காகச் செலவிட்டிருக்கும் மூன்று அல்லது மூன்றரை ரூபாயை அஞ்சல் (மணியார்டர்) மூலம் அனுப்புவது அழகன்று-அது மதிப்புமாகாது. ஒரு படித்த பெண்ணுக்குப் புத்தகத்தைவிட வேறு பொருள் கொடுப்பதும் பொருந்தாது-முறையாகாது. கொடுக்கும் புத்தகத்தையோ பெற மறுக்கிறார் - என்ன செய்யலாம்?