பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 51 அறவணன் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்து விட்டார்: அன்றில் முகம் தூய்மை செய்து வர எழுந்து சென்றிருந்த போது, அவளது கைப்பை ஒன்றில் அந்தப் புத்தகத்தை அவள் அறியாதபடி வைத்துவிட்டார். ஒருவரிடம் உணவு வாங்கி உண்டதனால் ஏற்பட்ட கறையைக் கழுவிவிட்டோம் என்று பெருமூச்சு விட்டார். இப்பொழுது தான் பழைய அறவணனாக-முழு அறவணனாக ஆனதாக அவருக்குப் பட்டது. பிரெஞ்சு ஆசான்' என்னும் புத்தகம் இரண்டு வாங்கினதாக அறவணன் சொன்னது முழுப்பொய். அவர் ஒன்றுதான் வாங்கியிருந்தார். உங்களுக்கு வேண்டுமே என்று அன்றில் மறுத்துவிட்டால் என்ன செய்வதென்று கருதியே, இரண்டு வாங்கினதாகப் புளுகிவைத்தார். தன்னிடம் பெற்ற உதவிக்கு ஈடாக அதாவது உணவின் விலையாக இந்தப் புத்தகத்தைக் கொடுக்க இவர் முயலு கிறார் என்பதை நன்றாகப் புரிந்து கொண்ட அன்றில் அறவணனுக்கு மேல் ஓர் அண்டப் புளுகு புளுகியிருக்கிறாள். அதாவது, தானும் அப்படி ஒரு புத்தகம் சென்னையில் வாங்கியிருப்பதாக அன்றில் சொன்னது தீடீர்ப் புளுகுதான். அவள் அப்படியொன்றும் வாங்கியிருக்க முடியாது. தன் பதிலுதவியைத் தட்டிக்கழிக்கவே அவள் அப்படிப் பொய் கூறியுள்ளாள் என்று அறவணன் புரிந்து கொண்டுதான், அவளறியாமல் அந்தப் புத்தகத்தை அவள் பைக்குள் வைத்து விட்டார். அறவணனும் அன்றிலும் உரையாடிக் கொண்டும் உறவாடிக்கொண்டும் வந்ததைப் பக்கத்திலும் எதிரிலும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களைப் பற்றிப் பலவிதமாக எண்ணினர். கணவன் மனைவி எனச் சிலர் எண்ணினர். காதலர்கள் என மற்றுஞ் சிலர் கருதினர். இப்போது தான் இங்கே தான் காதல் பிறக்கிறது என ஒரு