பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சுந்தர சண்முகனார் சிலர் நினைத்தார்கள். இவர்களுக்கு வெட்கமில்லையா - இவர்கள் உடம்பில் சூடுசுரணை ஒன்றும் இல்லையா? பலர் முன்பா காதலைக் காட்ட வேண்டும்? என்று எள்ளி ஏளனஞ் செய்தனர் ஒரு காரார். இடையிடையே ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் இந்த மக்கள் என்ன எண்ணிக் கொள்வார்களோ என்று - களங்க மற்ற அன்றிலும் அறவணனும் கவலைப்படாமலும் இல்லை-கலங்கத்தான் செய்தனர். புகைவண்டி பொன்மலை நிலையத்தைத் தாண்டித் திருச்சிராப்பள்ளி சந்திப்பை நோக்கி ஒடிக்கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் இருவரும் பிரியப் போகின்றனர். அறவணன் அன்றிலுக்குத் தன் இறுதி நன்றியைத் தெரி வித்துக்கொள்ளலானார்: 'இடைவழியில் பணத்தைத் தொலைத்து விட்ட நான், நீங்கள் இல்லாவிட்டால் பட்டினி கிடந்திருப்பேன். நீங்கள் செய்த நன்றியை என்றும் மறவேன். தயை செய்து உங்கள் முகவரியைச் சொல்லுங்கள்-ஊர்போய்ச் சேர்ந்ததும் உங் களுக்குக் கடிதம் எழுதவேண்டும்.' 'என் முகவரி எதற்கு? கடிதம் எதற்கு? உதவி உபகாரம் நன்றி எல்லாம் இதோடு இருக்கட்டும். நான் உங்களுக்கு ஒன்றும் பெரிய உதவி செய்துவிட வில்லையே. நீங்கள் ஏன் வீணாய்த் தொல்லைப்படுகிறீர்கள்?" 'உதவி செய்தவர்களை மறக்க முடியுமா? கடிதம் எழுதாமல் இருக்க முடியுமா?’’ தயை செய்து மறந்து விடுங்கள்! கடிதத் தொடர்பு ஒன்றும் வேண்டாம்!"

  • மன்னிக்க வேண்டும்! நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்"