பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சுந்தர சண்முகனார் எண்ணம் முழுவதும் அவரையே மையமாக வைத்துச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. அவளுக்கு இது முற்றிலும் - நூற்றுக்கு நூறு புது அனுபவமே. எப்போதும் உள்ள வீட்டில்தான் இப்போதும் இருக்கிறாள் - எப்போதும் உள்ள பெற்றோருடன்தான் இப்போதும் இருக்கிறாள். ஆனால் தனியாய் இருப்பது போன்ற ஒருவகை உணர்வை அன்றில் அனுபவித்துக் கொண்டிருந்தாள். அந்நேரத்தில் அவளுக்கு வீடு வெறிச்சோடிக் காணப்பட்டது. அறவணனைப் பிரிந்த பின்புதான். அவரது அழகிய தோற்றமும், அவரது அரிய பண்பும் அன்றிலுக்குப் பளிச்சிட்டுத் தெரிந்தன. ஒரு சில மணி நேரத்தில் அவர் அவளை முற்றும் கவர்ந்து விட்டார். அதனால் அவள் ஒருவகைப் பிரிவுத் துன்பத்தைச் சுவைத்துக் கொண்டிருந்தாள் - ஆம், அந்த உணர்வு ஒருவகைச் சுவையாகவே இருந்தது. இதுதான் ஆண் - பெண் உணர்வின் இயல்பு போலும்! அந்நேரம் அன்றிலின் உள்ளம் ஒரு நிலையதாய் இருந்தது என்றும் சொல்வதற்கில்லை; மாறி மாறி எழும் பல்வகை உணர்வுகளுக்கிடையே சிக்குண்டு நெருக்குண்டு சாறாகப் பிழியப்பட்டது. அறவணன் இத்துணை அழகும் இனிய பண்பும் உடையவராக இருந்தாரே என்று அவள் உள்ளம் ஒரு சமயம் வியக்கும்; அவர் நம்மைப் பற்றி என்ன எண்ணிக்கொண்டிருப்பாரோ என்று ஒரு சமயம் வெட்கப்படும்; எந்த ஆடவரோடும் நெருங்கிப் பழகாத நாம், நம் பெண்மையை மறந்து, மென்மையைத் துறந்து, முன்பின் அறியாத எவனோ ஒருவனோடு இன்று நெருங்கிப் பழகிவிட்டோமே; அவன் யார் - நாம் யார்? அவனுக்கு உணவும் அளித்தோமே என்று ஒரு சமயம் வேதனைப் படும்-வேகம் கொள்ளும். இல்லையில்லை; அறவணனைப் போன்ற அரும்பெறல் ஆடவர் ஒருவரின் உறவு நமக்குக்