பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 55 மொழி இலக்கியம் இவற்றின் பேராலும் அப்படியொரு நெருக்கடி அடிக்கடி நேர்வதுண்டு. அந்த நேரத்திலுங் கூட அவள் விலகியே நிற்பாள்; கேட்ட வரையிலும் பதில் சொல்வாள். தேவையில்லாமலேயே வலிய வந்து பேச்சுக் கொடுத்து வம்புக் கிழுக்கும் ஆடவர் சிலரின் தீய குறிப்பைப் புரிந்து கொண்டு அவர்களைப் பொருட்படுத்தாது புறக்க னித்து விடுவாள். அதனால் அவள்மேல் கடுப்புக் கொண்ட குறும்புக்கார இளைஞர்கள், 'இவள் என்ன பேசா மடந்தையோ? ஆண்வாடையே படாதவளோ? ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணியோ என்று கிண்டல் செய்வதுண்டு. அதற்காகக் கவலைப்படுவதில்லை. ஆடவ ரோடு ஆடவர்போல் அணுகிதின்று சிரித்துப் பேசி மகிழும் சில இளம் பெண்களின் போக்கைக் கண்டு அவள் அரு வருப்பு கொள்வாள். அவர்தம் அறியாமைக்கு அஞ்சுவாள்அவர்தம் துணிவைப் பாராட்டாது இரக்கப்படுவாள். ஒரு கட்டிளங் கன்னியும் காளையும் என்னதான் கள்ளங் கபடின்றிப் பழகினாலும், அது நாளடைவில் அணு அணுவாய் உருமாறி அங்கேதான் போய் நிற்கும் என்பது அன்றிலின் எண்ணம் போலும், இவ்வளவு விழிப்பாய் இருந்து வந்த அன்றில், இன்று ஒர் அயல் ஆடவரோடு நெருங்கிப் பழகிவிட்டாள். அவள் விரும்பவில்லைதான்-எதிர் பார்க்கவில்லை தான்- ஆனால் அப்படியொரு நிலைமை நேர்ந்து விட்டது. அறவணன் அருகில் இருந்தபோது, அவரைக் காதலராக-கணவராக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமே அன்றிலுக்கு எழவில்லை. மனிதருக்கு மனிதர்-படித்தவருக்குப் படித்த வர்-கல்லூரி விரிவுரையாளருக்கு விரிவுரையாளர் செய்ய வேண்டிய கடமை என எண்ணியே அவள் அவருக்கு உதவி செய்தாள். அஃதன்றி, காதலோ - காமமோ ஒன்றுமில்லை. ஆனால் அவரைப் பிரிந்த பின்பு, அவளது