பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சுந்தர சண்முகனார் மாசிலாமணி எத்தனையோ பேர்க்கு அறிவுரை கூறியிருக் கிறார். அவரா இப்பொழுது ஏமாந்து போவார்? மாசிலா மணி அப்படியொன்றும் பெரிய செல்வரல்லர், ஒரளவே வசதி உடையவர். ஓர் உயர்தர அலுவலாளராயிருந்து ஒய்வு பெற்றவர். நன்கு தமிழ் கற்றவர். அவர் குடும்பமே வாழையடி வாழையாகத் தமிழ் கற்ற குடும்பம். அந்தக் குடும்பத்தில் பிறந்ததனாலேயே அன்றிலுக்கு அந்த அழகுப் பெயர் வைக்கப்பட்டது. எனவேதான், நல்ல முறையில் வளர்க்கப்பட்ட தம் மகளுக்கேற்ற மாப்பிள்ளையை மாசிலாமணி தேடிக்கொண்டிருந்தார். ஆனால், விலைப் பொருளாக ஒரு மாப்பிள்ளையை ஏற்றுக்கொள்வதற்கு அவர் விரும்பவில்லை. இந்நிலையில் குளித்தலை என்னும் ஊரிலிருந்து ஒரு மாப்பிள்ளை ஏற்பாடு செய்யப்பட்டார். திருமணத்திற்கு முதல் கட்டமாகக் கைத்தாம்பூலம் மாற்றிக் கொள்வதற்காக மாப்பிள்ளை வீட்டிலிருந்து மூன்று பேர் பெண் வீட்டிற்கு வந்தார்கள். பெண்ணுக்குச் சீர்வரிசை மிகுதியாகச் செய்ய வேண்டும் என்று கண்டித்துக் கேளாததால், அவர்களின் உறவுக்கு மாசிலாமணியும் ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் கைத்தாம்பூலம் மாற்றிக் கொள்ள வந்தபோது திடீர்ப்புரட்சி செய்தார்கள். அதாவது, தங்கள் பையன் பி. இ. படித்து விட்டுத் தகுந்த வேலையில் இருப்பதால், ஏராளமான சீர் வரிசைகளுடன் பெண் கொடுப்பதாக எத்தனையோ பேர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்களாம். அதனால் குறைந்தது நூறாயிரம் ரூபாய் பெறுமானத்திற்காவது ஏதாவது செய்தால் தான் தங்கள் பிள்ளைக்கு அன்றிலை மண முடித்துக் கொள்வார்களாம், இல்லாவிடின் இப்போது கைத்தாம்பூலம் மாற்றிக்கொள்ள முடியாதாம்' என்று ஒரு திடீர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டார்கள். 'அந்த அளவிற்குச் செய்ய எனக்கு