பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 61 வசதியில்லை. சென்ற வாரமே சொல்லியிருந்தால் நான் உங்கள் உறவுக்கு ஒத்துக்கொண்டிருக்க மாட்டேனே. இப் போது தாம்பூலம் மாற்றுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்த பிறகு திடீரென இப்படிக் கேட்கிறீர்களேஇது முறையா? எனவே, போன வாரம் பேசி முடிவு செய்தவண்ணம் தாம்பூலம் மாற்றிக் கொள்ள வேண்டியது தான்' என்று மாசிலாமணி சொன்னார், வந்தவர்கள் ஒத்துக் கொள்ள வில்லை. நூறாயிரத்திற்குத் தோது செய்தால் தான் திருமணத்திற்கு உடன்படுவோம் என்று ஒரே பிடியாய் இருந்தார்கள். மாசிலாமணியின் மகனும் அன்றிலின் அண்ணனுமான இளந்திரையன் என்பவனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்-ஒன்றும் நடக்கவில்லை. திருமணம் வேண்டுமானால் நாங்கள் செய்து வைக்கிறோம் என்று தந்தையும் மகனும் தெரிவித்துக்கொண்டார்கள். அதற்கும் மரப்பிள்ளை விட்டார் மசியவில்லை. அப்படி யானால் நீங்கள் வந்தவழியே போகலாம் என்று வழி காட்டி விட்டார் மாசிலாமணி. வந்தவர்கள் எழுந்து நகரத் தொடங்கினர். இளைஞனாகிய இளந்திரையனால் இந்தக் கொடுமை யைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மாப்பிள்ளை வீட்டார் வந்து தங்கள் மானத்தை வாங்கி விட்டதாக உணர்ந்தான் அவன். அவர்களை வறிதே அனுப்பக் கூடாது தகுந்த தண்டனை கொடுத்தே அனுப்ப வேண்டும் என்று அவனது இள உள்ளம் எண்ணியது. உடனே அவன் மாப்பிள்ளையின் தந்தையாகிய தாண்டவராயன் மேல் பாய்ந்து அவரைத் தாக்கு தாக்கு’ என்று தாக்கினான். அடி பொறுக்க மாட்டாத அவர் குய்யோ முறையோ என்று கூவினார். அப்போது மாசிலாமணி இது முறையன்று என்று மைந்தனின் கன்னத்தில் நான்கு அறை அறைந்து அவனை விலக்கிவிட்டு, அடிவாங்கியவரிடம்