பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சுந்தர சண்முகனார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அப்போது இளந்திரையன் தந்தையை நோக்கி, 'அவர்களிடம் மன்னிப்புக் கேட்கா தீர்கள் அப்பா! நான் செய்தது சரிதான். அவர்கள் செய்ததே தவறு. இங்கே அடி வாங்கினால்தான், இனி எங்கேயும் சென்று பத்தாயிரம் இருபதாயிரம் என்று மூச்சு விடமாட்டார்கள். இது இவர்களுக்கு மட்டுமன்று-உலகில் பெண் வீட்டாரின் உயிரை உறிஞ்சும் மாப்பிள்ளை வீட்டார் எல்லோருக்கும் ஒரு பெரிய பாடமாக இருக்கட்டும்!" என்று இடிமுழக்கம் செய்தான். சரிதான் நிறுத்துடா! நம் வீடு தேடி வந்தவர்களை இப்படித்தான் நடத்துவதா? நீ என் மகனா? இனி என் முகத்திலே விழிக்காதே-வீட்டை விட்டு வெளியே போய்விடு' என்று மாசிலாமணி மகனைக் கடிந்து பேசிவிட்டு மாப்பிள்ளை வீட்டார் பக்கம் திரும்பினார். அவர்கள் அங்கே இருந்தால்தானே! நழுவி விட்டார்கள். அந்தோ! நூறாயிரமும் கிடைக்கவில்லை. பெண்ணும் கிடைக்கவில்லை - உதை கிடைத்ததுதான் மிச்சம். மகனது அடாத செயலை எண்ணி எண்ணி மாசிலாமணி மனம் புழுங்கினார். இளங்கன்று அச்சம் அறியாது' என்றபடி அவன் இப்படிச் செய்துவிட்டானே. இனி யார் நம் வாயிற்படி தேடிப் பெண்ணுக்கு வருவார்கள்? இதைக் கேள்விப்பட்டால் எவருமே நம் வீட்டுப் பக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டார்களே என்று மாழ்கினார் மாசிலாமணி. தாண்டவராயனை இளந்திரையன் அடித்து விட்டானே தவிர, அவனுக்கும் மனம் அமைதி கொள்ளவில்லை. ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு' என்பதுபோல நாம் நடந்து விட்டோமே என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். 'உன் நண்பன் யார் என்று சொல்லு - பிறகு நீ யார் என்று நான் சொல்லுகிறேன்' என்ற முது