பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சுந்தர சண்முகனார் கின்றார்கள். பெண் குழந்தைகளையோ, எங்கோ போக வேண்டிய பொருளாக . எவருக்கோ உரிய பொருளாக எண்ணுகிறார்கள். பெண் குழந்தைகளைப் பெருஞ் சுமை யாகவும் கருதுகிறார்கள். ஏனென்றால், எதிர்காலத்தில் அவர்களால் வருமானம் கிடைக்கப் போவது இல்லை யல்லவா? மேலும், ஆண்பிள்ளைகளுக்குத் தம் செல்வத்தைச் சரிநிகராகப் பங்கிட்டளிப்பதைப் போலப் பெண்பிள்ளை களுக்கு அளிப்பதில்லை. அதனால் ஒரு பெண், வேறு ஆடவன் ஒருவனை நம்பியே வாழவேண்டியிருக்கிறது. 5. வாழையடி வாழையாக மேற்கூறியவாறே வாழ்ந்து பழகிப்போன குருதியிலே (இரத்தத்திலே) ஊறிப்போன பழக்கமும் ஒரு பெரிய காரணமாகும். இப்படிப் பல காரணங்களால் பெண்கள் மணஞ்செய்து கொள்ளாமல், ஆடவரைப்போல் தம் விருப்பப்படி நடந்து கொள்ளும் வாய்ப்புக்கு இடமில்லாது போயிற்று.' 'ஆணின் துணை இன்றிப் பெண் தனித்து வாழ முடியாது-வாழக்கூடாது என்கிறார்களே, அப்படியே ஒரு பெண் ஒருவனை மணந்து கொண்டாலும், நம் நாட்டைப் பொறுத்தவரைக்கும், கடைசிவரையும் அவளது நிலையான வாழ்விற்கு உறுதியான பொறுப்பு (உத்தரவாதம்) உண்டா? இல்லையே. தாலி கட்டின மறு விநாடியே கணவன் இறந்து விட்டாலும், அவள் வேறொருவனை மறுமணஞ் செய்து கொள்வதற்கு நம் நாட்டு மரபு இடந்தராதே-அவள் ஆண் துணையின்றித் தனியாகத் தானே காலத்தைப் பிடித்துத் தள்ளிக் கழித்துத் தொலைக்க வேண்டும்! ஒரு பெண் ஆண் துணை இன்றித் தனியாக இருக்க முடியாது - இருக்கக் கூடாது என்கிறார்களே, இளமையில் கணவனை இழந்த பிறகு மட்டும் தனியாக இருக்க முடியுமா? இருக்கலாமா? திருமணமாகிக் கணவனையிழந்த பிறகு தனியாக இருக்க