பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 69 முடிவதைப் போல, திருமணம் செய்து கொள்ளாமலேயே தனியாக இருக்க முடியாதா இருக்கக் கூடாதா? ஆனால், திருமணமாகிக் கணவன் இறந்துவிடின் அவனது சொத்தை வைத்துக் கொண்டு காலம் கழிக்கலாம் என்று சொல்லக் கூடும். இந்த ஏழை நாட்டில் எத்தனைக் குடும்பங்களில் சொத்து இருக்கிறது? கணவனை இழந்த பெரும்பாலான பெண்கள் தம் சொந்த உழைப்பின் மூலமே காலம் தள்ளு கிறார்கள் என்பதை மறந்துவிடுவதற்கில்லை. மற்றும், கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்து கொள்ளும் வாய்ப்பை மனமார அளிக்காத இந்நாட்டில் - மற்றும் கைம்பெண் என்று கூறி நல்ல நிகழ்ச்சிகளிலிருந்து ஒதுக்கும் இந்த நாட்டில் - அவர்களைப் பார்த்துவிட்டுப் போனால் காரியம் கெட்டுவிடும் என்று அஞ்சுகிற இந் நாட்டில் - அவர்களுடைய அழகினைச் சிதைத்துப் பேயுருவம் கொள்ளச் செய்திருக்கிற இந்நாட்டில் - பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் நித்திய சுமங்கலி'களாக இருந்தால் தான் என்ன? - என்ற வேகம் ஏன் வராது? இப்படியே எல்லாரும் திருமணம் செய்து கொள்ளா திருப்பின் ஒழுக்கம் எப்படி நிலைக்கும் - உலகம் எவ்வாறு வளரும்? - என்ற கேள்வி எழலாம். எல்லாரும் இப்படி இருக்கமாட்டார்கள். ஒருசிலர்தான் இருக்க முடியும். எனவே, ஆண்களில் சிலர் மணம் இன்றி இருப்பதுபோல் தாமும் இருக்கப் பெண்களுள் சிலர் விரும்பினாலும் சமூகம் அதற்கு இடம் தரவேண்டும் - என்பதுதான் இங்கே வேண்டற்பாலது. சமூகம் இடம்தர வேண்டும் என்றால் என்ன? மணமின்றி வாழும் பெண்களை யாரும் ஏளனக் கண்ணுடன் பார்க்கக்கூடாது - ஐயப்பாடு (சந்தேகம்) கொண்ட பார்வையுடன் நோக்கக் கூடாது. அப்படி யென்றால், ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளாமலேயே உயர்ந்த முறையில் - சிறந்த நெறியில் உறுதியாக வாழ்ந்து