பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சுந்தர சண்முகனார் அன்புடன் பழகிய அறவணன் மேல் அன்றிலின் மனம் சென்றதில் வியப்பில்லையே. இளம் பெண் துறவியாகக் காவியப் புலவனால் படைக்கப்பட்ட மணிமேகலை இறுதி வரையும் மனத்தோடு போராடிக் காம உணர்வைக் கட்டுப் படுத்த வேண்டியிருந்தது. ஆனால் அந்தக் கட்டாயம் அன்றிலுக்கு வேண்டியதில்லையே. இவள் வாழப் பிறந்தவ ளாயிற்றே. இப்போது அன்றிலுக்குள்ள கவலை யெல்லாம், அறவணன் தன்னை ஏற்றுக் கொள்வாரா என்பதைப் பற்றித்தான். ஏன்? 'புகைவண்டியிலிருந்து பிரியவேண்டிய நேரம் வந்தபோது, ஊர் சென்றதும் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுவதாக அவர் சொன்னபோது, ஒரு தொடர்பும் வேண்டாம் என்று கொல்வதுபோல் மறுத்து விட்டோமே, அதனால் அவர் தொடர்பை நாம் வெறுக்கிறோம் என் றெண்ணி அவர் நம்மை மறந்து விட்டிருப்பாரோ? அன்றியும், அவர் நமக்கு அன்பளிப்பாக ஒரு புத்தகம் கொடுக்க முயன்றபோது, நாம் அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டோமே. இவ்வாறு பல வகையிலும் அவரைக் கொல்லாமல் கொன்றுவிட்டோமோ அவர் நம்மைப்பற்றி என்ன நினைப்பாரோ? ஒருவேளை, நாமாக அவருக்கு வலிந்து உணவளித்த தால், அவர், நாம் வலிய விரும்புவதாக எண்ணி, தவறான நடத்தை உடையவள் என நம்மைப்பற்றித் தாழ்வாக எண்ணிக்கொள்வாரோ? ஐயோ, என் உள்ளம் நாணுகிறதே! பெண்கள் உடன் பிறந்தார் போன்று அன்புடன் பேசி ஏதேனும் ஒன்று கொடுத்தாலும், தம் கட்டழகிற்கு மயங்கிக் காம உணர்வு கொண்டு இப்படிப் பெண்கள் செய்ததாக எண்ணிக் கொண்டு, தவறான குறிப்புடன் அணுகுவது, ஆண்கள் உலகத்திற்கு ஒரு பெருஞ் சாபக் கேடாயிற்றே.