பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வீகத் திருமணம் 73 இத்தகைய உலகில் பெண்களும் விழிப்பாகத்தானே இருக்க வேண்டும்? எப்படியிருந்தபோதிலும் அவர் நம்மை மட்டமாக எண்ணிக்கொண்டிருக்க மாட்டார். உயர்ந்த பண்புடையவள் என்றே கருதியிருப்பார். அவரிடம் அந்த நல்ல பெயர் வாங்கும் முறையிலேயே நாம் நடந்துகொண்டிருக்கிறோம். ஆணாகிய அவர் பெண்ணாகிய நம்மைவிட மிகவும் கூச்சம் உடையவராகத் தெரிகிறாரே. நாம் உணவளித்தபோது அதை ஏற்றுக்கொள்ள எவ்வளவோ கூச்சப்பட்டாரே! அவருக்கு உணவு நல்கியதில் நமக்கு எத்துணை மகிழ்ச்சி! அவர் உண்டதைக் கண்டபோது நமக்கு எத்துணை மன நிறைவு! இந்த மகிழ்ச்சியே இத்துணை பெரிதென்றால், அவர் நம்மைக் காதலியாக ஏற்றுக் கொண்டால் - இது நடக்குமா? - அதன் பின்பு நாம் அவருக்கு உணவுபடைக்கும் போது உண்டாகும் மகிழ்ச்சியை நம்மால் தாங்கவே முடியாதே! அவரை மீண்டும் எப்போது காண்பேன்? எங்கே காண்பேன்? அவர் ஒரு முடராயிருக்கக் கூடாதா? ஒரு முரடராயிருந்திருக்கக் கூடாதா? அப்படியிருந்திருந்தால், அவரைப் பிரிந்ததனால் நமக்கு இவ்வளவு வேதனை ஏற்பட் டிராதே! "மூடரது தொடர்பே மிகவும் இனியது; ஏனெனில் பிரிய வேண்டியது நேர்ந்தால் ஒரு கவலையும் உண்டாகா தல்லவா - என்னும் கருத்துடைய பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்’’ என்னும் வள்ளுவர் குறளின் நயத்தை அன்று கற்றபோது அறிந்து சுவைக்க முடியவில்லையே. இன்றுதானே அதன் உள்நயத்தை உணர முடிகின்றது -