பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சுந்தர சண்முகனார் அன்றிலைப் பொறுத்த வரையில், அறவணனது நிலையும் அன்னதே. அன்றில் இன்றி இனி வாழ முடியாது என்ற அளவுக்கு அவரது உணர்வு உயர் கட்டத்தை எட்டத் தொடங்கியது. இலக்கியங்களில் பெண்களின் உரு திருவைப் புலவர்கள் புனைந்திருப்பதைப் படிக்கும்போதெல்லாம், இவ்வளவும் வெறுங் கற்பனை; இந்தப் புலவர்கட்கு வேறு வேலை யில்லை போலும் என்று எளிமையாக எண்ணி வந்த அறவணன், இவ்வாறு அன்றிலின் உரு திருவை அகத்தில் உன்னுந்தோறும் உன்னுந்தோறும், புலவர்கள் எழுதி யிருப்பது புனைந்துரை யன்று - நூற்றுக்கு நூறு முழு உண்மையே? இன்னும் கேட்டால், பெண்டிரின் அருமை பெருமையினை இன்னும் எந்தப் புலவரும் முழுமையாகச் சொல்லி முடிக்கவில்லை; எவராலும் சொல்லவும் முடியாது; சொல்லவும் தெரியாது' என்றெல்லாம் எண்ணத் தொடங்கி விட்டார். அறவணனின் காதல் உள்ளம் இந்த அளவுக்குப் போய் விட்டது வியப்பே. இவ்வாறு அன்றிலின் அருமை பெருமை உயர்கட்டத்தில் அறவணனால் உணரப்பட்டாலும் ஒருவகையில் அவள் அவருக்குப் புரியாத புதிராகவும் காணப்பட்டாள். அவள் நம்மேல் காதல் கொண்டுள்ளார் - இல்லையா? அவள் நமக்குக் கிடைப்பாளா மாட்டாளா?'-என்று அறவணனது உள்ளம் ஒரு நேரம் ஊசலாடும்; இன்னொரு நேரம், அவள் நமக்குக் கட்டாயம் கிடைப்பாள்; நம்மேல் அவளுக்குக் காதல் இல்லையெனில், இவ்வளவு பரிந்து நமக்கு உணவு அளித்திருக்க மாட்டாள்; எனவே, என்றைக்காயினும் அன்றில் நம்மவளே - என்று ஒரு துணிவுக்கு வரும். இல்லையில்லை; புகைவண்டியிலிருந்து நாம் அவளைப் பிரிந்த