பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 75 6 அன்றிலிடம் பிரியாவிடை பெற்றுச் சென்ற அறவணன், திருச்சி சந்திப்பு நிலையத்தில் அலுவல் பார்க்கும் தம் எட்டின உறவினர் ஒருவரின் இல்லம் ஏகித் தங்கினார். அங்கு அவருக்கு அன்றைய இரவு 'சம்பூர்ண இராமா யணம்' ஆக அன்று - சம்பூர்ண அன்றிலாகவே கழிந்தது. மாடியில் படுத்துறங்க அவருக்கு வசதி செய்து தரப்பட் டிருந்தது. ஆனால் அவர் படுக்கையில் படுக்கவே இல்லை. ஆங்கிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் சிறிது நேரம் சாய்ந்து கொண்டிருப்பார்; சிறிது நேரம் மொட்டை மாடியில் உலாத்துவார்; சிறிது நேரம் நின்றபடியே, புகைவண்டி சந்திப்பு நிலையத்திலிருந்து அன்றில் பிரிந்துபோன திசையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். பொன்னை உருக்கிப் புதிதாய் ஊற்றிய வண்ண வார்ப்பட வடிவப் பெண் சிலை ஒன்று உயிர் பெற்று எழுந்து உலவியது போன்ற அன்றிலின் தோற்றத்தை எண்ணி எண்ணிப் பெருமூச்செறிவார். அன்றிலாவது படுக்கையில் படுத்தபடி எண்ணக் கடலில் தத்தளித்தாள். அறவணனோ, மது வுண்டு மயங்கியவர் போலத் தள்ளாடிக் கொண்டிருந்தார். அன்றிலைப் பிரிந்த பின்பே அவளது அருமை அவருக்குத் தெரிய வந்தது. இழந்த செல்வம் திரும்புமா? செல்வம் இருக்கும்போது சிலருக்கு அதன் அருமை தெரிவதில்லை. எல்லாம் இழந்து ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் போன பின்புதான் ஒரு காசு ஒராயிரமாகத் தெரியும். கண் இருக்கும்போது அதன் அருமை புரிவதில்லை. கண்ணென ஒரு பொருள் இருப்பதாகவும் அது வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத தாகவும் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. கண் போன பின்புதான் அதன் அருமை பெருமை தெரியவரும்.