பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சுந்தர சண்முகனார் ஏற்பட்டதற்காக அவள் நாணிக் கோணி ஒரு சிறு குறும் பார்வையால் தன் நன்றியறிவிப்புக் கடமையை முடித்துக் கொள்கிறாள். பெரியவர் வண்டியில் வரவில்லை - கீழே தான் இருக்கிறார் - மகளை வண்டி ஏற்றிவிடவே வந்தார். 'அம்மா, பார்த்துப் போய் வாம்மா! திடீரென்று கோவையிலிருந்து தந்தி வந்ததால் நான் உனக்குத் துணையாக வரமுடியாமற் போயிற்று ...' என்று சொல்லிக் கொண்டே பெரியவர் வண்டியின் கூடவே ஓடிவந்தார். 'நீங்கள் நில்லுங்கள் அப்பா, நான் போய் வருகிறேன்." என்று அவள் சொல்ல, இன்னும் பெரியவர் ஏதோ சொல்ல, வண்டி நகர்ந்து கொண்டேயிருக்குமா - படுவிரைவாய்ப் பறந்தது. எல்லோரையும் சேர்த்து இரண்டாவது வகுப்புப்பெட்டிக் குள்ளே எழுவர் இருந்தனர். இப்போது அவளைச் சேர்த்து எண்மர் ஆயினர். அந்தப் பெட்டிக்குரிய எண்ணிக்கையும் அவ்வளவுதான். அவளும் அந்த இளைஞரும் நீங்க மற்ற அறுவரும் பிறமொழி மாநிலத்தினர் - மதுரையில் நடந்த ஒரு மாநாட்டிற்காக வந்து தமிழகத்து நகர்கள் சிலவற்றைச் சுற்றிப் பார்த்து விட்டுத் தம் நாடு திரும்புபவர் - தமிழ் அறியாதவர்-படுத்து நன்கு உறங்கிக்கொண்டிருக்கின்றனர். அவள் வண்டிக்குள் ஏறிச் சென்றபோது, அந்தத் தமிழ் இளைஞரின் பக்கத்தில் ஒருவர் உட்கார மட்டும் இ-ம் இருந்தது. எங்கே அமர்வது என்று புரியாமல் அவள் விழித்தாள். இளைஞர், தனக்கு அப்பக்கத்தில் அரைப் பலகையில் முடங்கித் தூங்கிக் கொண்டிருப்பவரோடு தன் உடலை ஒட்டிக் கொண்டு, தனக்கு இப்பக்கத்திலிருக்கும் காலியிடத்தைக் கையால் அவளுக்குச் சுட்டிக்காட்டினார். அவ்விளைய ஆடவரின் பக்கத்தில் அமர அவள் தயங்கினாள். அஃதுணர்ந்த இளைஞர் நின்றுகொண்டு பயணஞ்செய்யலாம்